கம்பராமாயணம் 2722 · ஆரணிய 3.15

Section ஆரணிய காண்டம் / 3. அகத்தியப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'.

பொருள் · Meaning in Tamil

இந்திரன் எனின் - தேவேந்திரனோ என்றால்; அவன் அரக்கர் ஏயின - அவன் இராக்கதர்கள் கட்டளையிட்ட வினைகளை; சிந்தையில் சென்னியில் கொள்ளும் செய்கையான் - மனத்திலும் சிரசிலும் ஏற்று நடக்கும் ஏவலனாக உள்ளான்; (ஆகையால்) எந்தை - எம் தலைவனே!; இடுக்கண் நீக்குவார் மற்று யார் உளர் - (எங்கள்) துன்பங்களைப் போக்குவோர் (உன்னையன்றி) வேறு எவர் இருக்கின்றனர்? (ஒருவரும் இல்லை); யாம் செய்த தவத்தின் மாட்சியால் வந்தனை -நாங்கள் முன்னர்ச் செய்த தவத்தின் பெருமையால் (எங்களைப் பாதுகாக்க) இங்கு வந்தருள்செய்தாய்.

இந்திரனைக் குறித்தது அவன் தேவர் தலைவன்; வேள்வியைக் காக்கும் கடமை உடையவன்; ஆயினும் அவன் அரக்கர்களுக்குப் பணி புரியும் நிலையில் இருப்பதால் 'இனி உன்னையன்றி எங்கட்கு வேறு கதி இல்லை' என இராமனிடம் முனிவர்கள் கூறினர். சென்னியிற் கொள்ளுதல் ஒருவன் காலால் இட்ட பணியைத் தலையால் செய்யும் அடிமை நிலை. கங்கை காண் படலத்தில் குகன் பரதனை வினவியபோது 'தகவுடையோர் சிந்தையினும் சென்னியினும் வீற்றிருக்கும் சீர்த்தியான்' (2334) என வரும் தொடருடன் ஒப்பிடற்பாலது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'As for Intiraṉ, whatever the demons command
  2. he takes to heart and bears on his head and carries out;
  3. Father! Who else is there to end our distress?
  4. You have come, through the greatness of the penance we have done.'

What the poem says

Intiraṉ, king of the gods, ought to protect the sacrifices, but he has become the demons' servant, obeying their orders as a slave carries out a command on his head. So the sages have no protector but Irāmaṉ, whose coming they owe to their own past penance.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'intiraṉ eṉiṉ, avaṉ arakkar ēyiṉa
cintaiyil, ceṉṉiyil, koḷḷum ceykaiyāṉ;
entai! maṟṟu yār uḷar iṭukkaṇ nīkkuvār?
vantaṉai, yām ceyta tavattiṉ māṭciyāl '.