கம்பராமாயணம் 2721 · ஆரணிய 3.14

Section ஆரணிய காண்டம் / 3. அகத்தியப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

மாதவத்து ஒழுகலெம் - பெருமை பொருந்திய தவநெறியில் நடக்கின்றோம் அல்லோம்; மறைகள் யாவையும் ஓதலெம் -வேதங்கள் எல்லாவற்றையும் ஓதுகின்றோமில்லை, ஓதுவார்க்கு உதவல் ஆற்றலெம் - வேதம் ஓதும் மாணவர்களுக்கு உதவும் கடமையைச் செய்கின்றோம் அல்லோம்; மூதெரிவளர்க்கிலெம் - பழமையான வேள்வித் தீயை வளர்க்கின்றோம் இல்லை; முறையின் நீங்கினேம் - எங்களுக்குரிய ஒழுக்கங்களிலிருந்து விலகினோம்; ஆதலின் அந்தணரேயும் ஆகிலேம் - ஆகையால் அந்தணர் என்பது கூட ஆகின்றோமில்லை.

அந்தணர்க்குரியவையாம் ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்பவற்றுள் ஓதல் ஓதுவித்தலையும் வேட்டலையும் கூறியுள்ளார். பிறவற்றை அருத்தாபத்தியால் பெறவைத்தார். மூதெரி என்பது பிரமசரியம் தொடங்கி வளர்த்து வருவதான வேள்வித்தீயாகும். மறைகள் யாவையும் என்பதால் வேதம், வேத அங்கங்கள், சாத்திரங்கள் முதலியவற்றையும் கொள்வர். இத்தகைய தீய வினைகளிலிருந்து நீக்க நீயே கதி என்றார் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'We do not keep to great penance; the Vedas, all of them,
  2. we no longer recite; we cannot help those who learn them;
  3. we do not tend the ancient fire; we have fallen from our rule;
  4. and so we are not even Brahmins any more!'

What the poem says

The sages list the duties they can no longer perform because of the demons: penance, reciting the Vedas, helping students learn them, and keeping the sacred fire lit since their student days. A Brahmin's six duties are to learn and teach, to sacrifice and have sacrifice made, and to give and receive; failing in them, they feel they have lost their very identity, and only Irāmaṉ can save them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'mā tavattu oḻukalem; maṟaikaḷ yāvaiyum
ōtalem; ōtuvārkku utaval āṟṟalem;
mūteri vaḷarkkilem; muṟaiyiṉ nīṅkiṉēm;
ātaliṉ antaṇarēyum ākilēm! '