கம்பராமாயணம் 2720 · ஆரணிய 3.13

Section ஆரணிய காண்டம் / 3. அகத்தியப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
''
பாட வேறுபாடு · Project Madurai reads
1''வல்லியம் பல திரி வனத்து மான் என ,
எல்லியும் பகலும் நொந்து இரங்கி ஆற்றலெம் ;
சொல்லிய அற நெறித் துறையும் நீங்கினெம் ;
வில் இயல் மொய்ம்பினாய் ! வீடு காண்குமோ ? ''

பொருள் · Meaning in Tamil

வில்லியல் மொய்ம்பினாய் - வில்வித்தையில் வலிமையுடையவனே!; வல்லியம் பலதிரி வனத்து மான் என - பல புலிகள் சஞ்சரிக்கும் காட்டிலுள்ள மான்களைப் போல; எல்லியும் பகலும் நொந்து இரங்கி ஆற்றலெம் - இரவும் பகலும் மனம் நொந்து வருந்தி (அவ்வரக்கர் செய்யும் கொடுமைகளைப்) பொறுக்கமாட்டாதவர் ஆகி; சொல்லிய அறநெறித் துறையும் நீங்கினெம் - நூல் கூறிய தருமவழிகளிலிருந்து விலகினவர் ஆனோம்; வீடு காண்டுமோ? - இத்துன்பங்களிலிருந்து விடுதலை அடைவோமா?

விற்கருவி கூறினமையால் 'அரக்கர்களை அழித்து எங்களைக் காப்பாய்' என்ற குறிப்பு புலப்படும். துன்ப மிகுதியைச் சுட்ட 'வீடு காண்டுமோ' என்றார். அறநெறியிலிருந்து வழுவியமையால் உயர்நிலை எவ்வாறு அடைவோம் என்று கூறினார் என்பர். புலி அரக்கர்களுக்கும் மான் முனிவர்களுக்கும் உவமை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Like deer in a forest where many tigers prowl,
  2. night and day we suffer and grieve and cannot bear it;
  3. we have strayed even from the path of dharma the scriptures lay down;
  4. O you whose shoulders are strong with the bow, shall we ever find release?'

What the poem says

The sages live like deer among tigers, suffering day and night. By addressing Irāmaṉ as a mighty archer they hint that he should destroy the demons. 'Release' means release from their misery, and also, since they have strayed from their discipline, the final release they fear they may now never reach.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1''valliyam pala tiri vaṉattu māṉ eṉa,
elliyum pakalum nontu iraṅki āṟṟalem;
colliya aṟa neṟit tuṟaiyum nīṅkiṉem;
vil iyal moympiṉāy! vīṭu kāṇṭumō? ''