கம்பராமாயணம் 2728 · ஆரணிய 3.21
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆவுக்கு ஆயினும் - பசுக்களைக் காப்பதற்கானாலும், அந்தணர்க்கு ஆயினும் - அந்தணர்களைக் காப்பதற்கானாலும்; எளியவர்க்கு ஆயினும்- ஏழைகளைக் காப்பதற்கானாலும், யாவர்க்கு ஆயினும் -எவர்களைக் காப்பதற்கானாலும், சாவப் பெற்றவரே - உதவிசெய்து அதனால் இறக்கப் பெற்றவர்களே; தகை வான் உறை தேவர்க்கும் தொழும் தேவர்கள் ஆகுவார்- பெருமை பொருந்திய விண்ணுலகில் வாழும் தேவர்களுக்கும் தொழுது வணங்கக்கூடிய தேவர்களாக ஆவர்.
ஆ - பசு. இது எல்லா உயிரினங்களிலும் புனிதமும் பயன் தருவதும் ஆதலால் எல்லாவற்றிலும் முன்வைக்கப் பெற்றது. “விடுநில மருங்கின் மக்கட்கெல்லாம், பிறந்த நாட்டொட்டுஞ் சிறந்ததன் தீம்பால், அறந்தரு நெஞ்சோடருள் சுரந்தூட்டும்” (மணிமே. ஆபுத்திரன் 51 - 54) என்பர். ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் என்று புறநானூறும் (9) குறிக்கும் அடியோடு இதனை ஒப்பிட்டுக்காணத்தக்கது. எளியர்- மெல்லியர் என்ற பொருளில் பெண்டிரையும் குறிக்கும். இத்தகையோர்க்கு உதவி செய்வதால் இறந்தோர் தேவர்க்குள்ளும் சிறந்த தேவராவர். இப்படலத்தை அடுத்துச் சடாயு காண் படலம் வருவதும் இப் பாடலின் பொருட் சிறப்பை எண்ணிப் பார்க்க இடம் தருகிறது. ஆயினும் என்பது எண்ணிடைச் சொல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Whether for cattle or for Brahmins,
- for anyone at all, or for the weak,
- those who are granted death in their defence become gods
- whom even the gods in glorious heaven worship.'
What the poem says
Irāmaṉ declares that anyone who dies protecting cows, Brahmins, the weak, or indeed anyone, becomes a god honoured even by the gods. Cows come first as the most sacred and generous of creatures, as the Maṇimēkalai and the Puṟanāṉūṟu also say, and 'the weak' can include women.
The commentary observes that the verse foreshadows the next chapter, in which the vulture Caṭāyu will give his life defending Cītai.