கம்பராமாயணம் 2729 · ஆரணிய 3.22

Section ஆரணிய காண்டம் / 3. அகத்தியப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சூர் அறுத்தவனும் - சூரபன்மனை வேல் கொண்டழித்த முருகக் கடவுளும்; சுடர் நேமியும் - பகைவரை ஒளியோடு கூடிய சக்கரத்தால் அழிக்கும் திருமாலும்; ஊர் அறுத்த ஒருவனும் - திரிபுரர் ஊர்களை எரித்தழித்த சிவபெருமானும்; ஓம்பினும் - துணையாக நின்று காத்தாலும்; ஆர் அறத்தினொடு அன்றி நின்றார் - யார் தருமத்தொடு பொருந்தாமல் பாவ வழிகளில் நின்றார்களோ; அவர் வேர் அறுப்பென் - அக்கொடியவர்களை வேரோடு அழியச் செய்வேன்; நீர் வெருவன்மின் என்றான் - நீங்கள் அஞ்சாதீர்கள் என்று இராமன் உறுதிமொழிந்தான்.

திரிமூர்த்திகளில் பிரமனை நீக்கிய காரணம் அவன் வேத நெறியில் எப்போதும் இருப்பதால் போரிட வாரான் என்பது கருத்து. முருகனை முதலில் கூறியது தேவ சேனாபதியாக அவன் விளங்குவதாம். அகநானூற்றில் (59. 10. 11) சூர்மருங்கறுத்த சுடரிலை நெடுவேற் சினமிகு முருகன் எனக் குறிக்கப் பெறுவான். இராமன் திருமாலின் அவதாரம் எனினும் மனிதனாக அவதரித்தற்கேற்பத் திருமாலைச் 'சுடர்நேமி' எனப் பிறன் போலக் கூறினான். ஊர் பொதுப்பெயராயினும் இது முப்புரங்களைக் குறிக்கிறது. அறத்தினோடன்றி நின்றார் என்பதால் அரக்கர் எனவும் பொருள் கொள்வர். தண்டகாரண்ய முனிவர்க்கு அபயமளித்து ஆதரித்தது காப்பிய நோக்காம் சரணாகதிக்குத் துணை செய்கிறது. சுடர்நேமி - வினைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Even if he who cut down Cūr, and he of the blazing discus,
  2. and the one who destroyed the cities, should shield them,
  3. those who stand apart from righteousness,
  4. I will tear out by the root; do not fear,' he said.

What the poem says

Irāmaṉ answers the sages of the Taṇṭaka forest, who have begged him for protection from the demons. He swears that even if Murukaṉ, who slew the demon Cūr, Tirumāl with his shining discus, and Civaṉ, who burned the three flying cities, were to defend the wicked, he would destroy them root and all.

Piramaṉ is left out of the list, the commentary explains, because he never takes up arms. Irāmaṉ, though himself an incarnation of Tirumāl, speaks of him as of another, as befits his human role. The promise of refuge to the sages is central to the epic's theme of protecting those who surrender.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'cūr aṟuttavaṉum, cuṭar nēmiyum,
ūr aṟutta oruvaṉum, ōmpiṉum,
ār aṟattiṉoṭu aṉṟi niṉṟār avar
vēr aṟuppeṉ; veruvaṉmiṉ nīr 'eṉṟāṉ.