கம்பராமாயணம் 2730 · ஆரணிய 3.23
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உரைத்த வாசகம் கேட்டு - இவ்வாறு இராமன் கூறிய அபய மொழிகளைக் (அம்முனிவர்கள்) கேட்டு; உவந்து ஓங்கிட - மகிழ்ச்சிப் பெருக்கு மீதூர; இரைத்த காதலர் - பொங்கி எழுந்த அன்பினை உடையவர்களும்; ஏகிய இன்னலர் - துன்பத்தை நீங்கியவர்களும்; திரித்த கோலினர் - (கையால்) சுழற்றிய தண்டங்களை உடையவர்களும்; தேமறை பாடினர் - தெய்வத்தன்மை வாய்ந்த வேதங்களைப் பாடினவர்களும்; நிருத்தம் ஆடினர் - கூத்தாடினவர்களுமாக; நின்று விளம்புவார் - இராமன் முன் நின்று கூறுவார்கள்.
இரைத்த - மேலோங்கி ஒலித்த என்றுமாம். ஏகிய இன்னலர் என்ற தொடரை 'அருங்கேடன்' என்பது போலக் கொள்க. இன்னல் ஏகியவர் எனப் பிரித்துக் கூட்டுவாரும் உளர். கோல் திரித்தல், மறை பாடல், நிருத்தமாடல் என்பவை பெருமகிழ்வு கொண்ட நிலையைக் காட்டும். 'ஆடினர் பாடினர், அங்கும் இங்குமாய் ஓடினர்; உவகைமா நறவு உண்டு ஓர்கிலார்' (193) எனப் பாலகாண்டத் திரு அவதாரப் படல வரி இந்நிலையைக் காட்டும். கோல் முனிவர்க்குரிய திரிதண்டம் அல்லது ஏக தண்டம். தேமறை என்பது இனிய வேதம் என்பர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Hearing the words he spoke, with joy swelling high,
- their love surging, their sorrow gone,
- twirling their staves, singing the sacred Vedas,
- they danced; and standing before him, they would speak.
What the poem says
The sages, hearing Irāmaṉ's promise of protection, are overcome with joy. Their troubles feel lifted at once; they whirl their ascetics' staves, chant the Vedas and dance, and then stand before him to reply.
The commentary compares this outburst with the scene of rejoicing at Irāmaṉ's birth in the first book, where people danced, sang and ran about as if drunk on delight. The staff is the triple or single staff carried by renunciants.