கம்பராமாயணம் 2731 · ஆரணிய 3.24

Section ஆரணிய காண்டம் / 3. அகத்தியப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தோன்றல் - தலைவனே!; நீ முனியின் - நீ கோபம் கொண்டால், மூன்று போல்வன - இந்த மூன்று லோகங்களைப் போல்வனவாகிய; முப்பது கோடி புவனத் தொகை வந்து - முப்பது கோடி உலகங்களுடைய கூட்டங்கள் (ஒரே காலத்தில் ஒருங்கே சேர்ந்து) வந்து; ஏன்ற போதும் - எதிர்த்தாலும்; எதிர் அல என்றலின் - (உனக்கு ஈடல்ல என்ற தன்மையில்; எம் தவப் பெரு ஞானமே சான்றலோ - எங்களுடைய மிகப் பெரிய தத்துவ ஞானமே சாட்சி அல்லவோ? (ஆம்).

முப்பது கோடி என்றது ஒன்றுக்குக் கோடியாகப் பெருகி வருதல். எல்லையற்ற பெருக்கத்தைக் கோடி என்பது இலக்கிய வழக்கு. நீ போர் செய்யுமுன் பகைவர் மீது கொள்ளும் சீற்றமே அவர்கள் வேரோடு அழிய வகை செய்யும். கடவுளின் பேராற்றலைத் தவம் செய்து பெற்ற ஞானத்தாலே அறிய இயலும் என்பார் தவப்பெரு ஞானம் - ஐயம் திரிபில்லாத மிகப் பெருமை வாய்ந்த தத்துவ ஞானம். புவனம் மூன்று - சுவர்க்கம், மண்ணுலகம், பாதாளம். தோன்றல் - அண்மை விளி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Prince! If you are angered, though worlds like these
  2. three, thirty crores of them, should come
  3. and oppose you, they are no match for you; of this
  4. our great wisdom won by penance is the witness.'

What the poem says

The sages answer Irāmaṉ. They have no doubt of his power: if he were roused to anger, even thirty crores of worlds like the three we know, heaven, earth and the underworld, could not stand against him.

They say their certainty comes from the insight gained through long austerity, which alone can perceive the true might of the divine. 'Thirty crores' is the poet's way of saying a number without limit.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tōṉṟal! nī muṉiyiṉ, puvaṉat tokai
mūṉṟu pōlvaṉa muppatu kōṭi vantu
ēṉṟa pōtum, etir ala; eṉṟaliṉ
cāṉṟu arō, em tavap peru ñāṉamē.