கம்பராமாயணம் 2732 · ஆரணிய 3.25
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அன்னது ஆகலின் - (நின் பெருமை) அத்தகையதாயிருத்தலால்; ஏயின ஆண்டு எலாம் - (நீ காட்டில் இருக்குமாறு) அமைந்த ஆண்டுகள் எல்லாம்; இன்னல் காத்து இங்கு இனிது உறைவாய் - எங்களுக்குத் துன்பம் வராமல் காத்து இந்தத் தவ வனத்தில் இனிது மகிழ்ந்து வாழ்வாயாக; எனச் சொன்ன மாதவர் பாதம் தொழுது - என்று கூறிய பெருந்தவ முனிவர்களின் அடிகளை வணங்கி; உயர் மன்னர் மன்னவன் மைந்தனும் வைகினான் - சிறந்த அரசர்க்கரசனாகிய தயரத சக்கரவர்த்தியின் மகனாம் இராமனும் தங்கியிருந்தான்.
ஏயின - சிற்றன்னை கைகேயி ஏவினை என்றுமாம். இன்னல் காத்து என்பது துன்பம் வராமல் தடுத்தல். உயர் என்ற அடையை மன்னர்க்கும், மன்னவனுக்கும் மைந்தனுக்கும் கூட்டிப் பொருள் காணலாம். மைந்தனும் என்று கூறியதால் சீதையும் இலக்குவனும் வைகினர் என்பது தானே பெறப்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Since that is so, for all the years appointed to you,
- guard us from harm and dwell here happily,' they said;
- and worshipping the feet of the great ascetics who spoke so,
- the son of the lofty king of kings stayed on.
What the poem says
The sages ask Irāmaṉ to remain among them for all the years of his exile and keep them from harm. He bows at their feet and agrees, and settles there.
'The years appointed' may also be read as the years ordered by his stepmother Kaikēyi. Since the son is said to stay, Cītai and Ilakkuvaṉ are understood to stay with him.