கம்பராமாயணம் 2733 · ஆரணிய 3.26

Section ஆரணிய காண்டம் / 3. அகத்தியப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மைந்தர் - இராமலக்குவர்கள்; அவண் - அவ்விடத்தில்; ஐந்தும் ஐந்தும் ஆண்டு - பத்து ஆண்டுகள்; தீது இலர் அமைதியின் வைகினர் - ஒரு துன்பமுமில்லாமல் மனநிறையுடன் தங்கியிருந்தனர்; மாதவர் சிந்தை எண்ணி - பெருந்தவத்தினராகிய அம்முனிவர்கள் மனத்தில் ஆலோசித்து; 'அகத்தியற் சேர்க' என - அகத்திய முனிவரைச் சேர்வீராக என்று சொல்ல; இந்து நன்னுதல் தன்னொடும் ஏகினார் - பிறை மதி போன்ற நல்ல நெற்றியையுடைய சீதையுடன் புறப்பட்டனர்.

ஒவ்வொரு முனிவர்கள் ஆச்சிரமத்திலும் சிலசில திங்கள்கள் தங்கியிருக்கப் பத்தாண்டுகள் கழிந்தன. வான்மீகத்தில் ஆச்சிரமங்களில் முறையே 1/3, 72, 4, 5, 7, 1, 1/4, 3/4, 3, 8 ஆகிய மாதங்கள் என்று பத்து ஆச்சிரமங்களில் ஐந்து ஆண்டுகளை ஒரு வட்டத்தில் கழித்துப் பின் அதேபடி இரண்டாம் வட்டத்தையும் கழித்தனன் எனக் காணப்பெறும். மைந்தர் - வலியோர் எனவும் ஆம். அகத்தியரிடமிருந்து இராவண வதத்திற்கு வில், அம்பு, அம்புப் புட்டில் முதலிய பெற வேண்டும் என இருத்தலின் சிந்தை எண்ணி அகத்தியற் சேர்க என்றனர். பத்து ஆண்டுக் காலச் செய்தியை ஓரே பாடலில் காட்டிக் காப்பியத்தில் கால விரைவுணர்த்தும் பாங்கைக் காணமுடிகிறது. இதுவரை உள்ள பாடல்கள் தண்ட காரண்யப் படலம் என்றும் இனி வருவன அகத்தியப் படலம் எனவும் சில சுவடிகளில் காணப் பெறும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Five years and five more, there, in peace,
  2. the young heroes stayed, free from harm; the great ascetics
  3. took thought and said, 'Go to Akattiyaṉ,'
  4. and they set out with her whose fine brow is like the crescent moon.

What the poem says

In a single verse the poet passes over ten years: Irāmaṉ and Ilakkuvaṉ live untroubled among the hermitages of the Taṇṭaka forest. Then the sages, after deliberation, send them on with Cītai to the great sage Akattiyaṉ.

The commentary explains that the sages had a purpose: from Akattiyaṉ Irāmaṉ was to receive the bow, arrows and quiver that would later serve in the slaying of Irāvaṇaṉ. In the Sanskrit telling the ten years are spent in two rounds through ten hermitages, a few months at each.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aintum aintum amaitiyiṉ āṇṭu, avaṇ,
maintar, tītu ilar vaikiṉar; mā tavar
cintai eṇṇi,'akattiyaṟ cērka 'eṉa,
intu naṉṉutal taṉṉoṭum ēkiṉār.