கம்பராமாயணம் 2734 · ஆரணிய 3.27
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
விடரகங்களும் - மலை வெடிப்புள்ள பள்ளங்களிலும்; வேய் செறி கானமும் - மூங்கில்கள் அடர்ந்த காடுகளிலும்; படரும் சில் நெறி பைப்பய நீங்கினார் - தொடர்ந்து செல்லும் சிறிய வழிகளை மெல்ல மெல்லக் கடந்து சென்று; சுடரும் மேனி சுதீக்கணன் என்னும் - ஒளி வீசும் மேனியை உடைய சுதீக்கணன் என்னும்; அவ் இடர் இலான் உறை சோலை சென்று எய்தினார் - துன்பங்களற்ற அந்த முனிவர் வாழும் தவச் சோலையைப் போய் அடைந்தனர்.
காட்டின் வழியை விடரகங்களும், வேய் செறி கானமும் படரும் சில் நெறி எனவும் விளக்கினார். சுதீக்கணன் - உக்கிரமான தவமுடைமையால் பெற்ற காரணப் பெயர். தவச் செறிவால் உடல் ஒளிமயமாயிருந்தது. தவத்தால் மெய்யுணர்வுற்று, இருவகைப் பற்றறவே பிறவித் துன்பம் நீங்கியதால் 'இடர் இலான்' என்றார். சுதீக்கணன், பைப்பய என்பன விகாரங்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Through mountain clefts and forests thick with bamboo,
- along the narrow winding paths, they slowly passed;
- and to the grove where dwelt that one free of sorrow,
- named Cutīkkaṇaṉ of radiant body, they came.
What the poem says
On the way to Akattiyaṉ, the three travel slowly through ravines and dense bamboo forest by narrow tracks, and reach the grove of the sage Cutīkkaṇaṉ.
His name points to the fierceness of his austerities, and his body shines with the power of his penance. He is called 'free of sorrow' because true knowledge has freed him from attachment and so from the suffering of rebirth.