கம்பராமாயணம் 2735 · ஆரணிய 3.28
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
செருக்கு இல் சிந்தையர் - கருவமில்லாத மனத்தை உடைய இராமலக்குவர்கள்; அவ்வழி அருக்கன் அன்ன முனிவனை - அவ்விடத்தில் கதிரவன் போல் ஒளியுடைய சுதீக்கண முனிவரின்; சேவடி தாழ்தலும் - செம்மையான திருவடிகளைப் பணிந்து வணங்கவும்; ஈண்டு இருக்க என்று இனியன கூறினான் - 'இங்கு இருப்பீர்களாக' என்று இனிய சொற்களைக் கூறினான்; மைந்தரும் மருக்கொள் சோலையில் வைகினார் - இராமலக்குவர்களும் மணம் நிறைந்த அந்தத் தவச் சோலையில் தங்கினார்கள்.
அருக்கன் - பேரொளி பெற்றமைக்கும் அஞ்ஞான இருள் அகற்றுதற்கும் உவமை. முன்னர்ச் 'சுடரும் மேனி' (2657) என்றதற்கேற்ப இங்கே அருக்கனை உவமை கூறினார். செருக்கு - யான் எனது என்னும் மதம். 'யானென தென்னும் செருக்கு' (குறள். 346). இராமலக்குவர் தாம் சக்கரவர்த்தி மைந்தர் என்ற செருக்கின்றிப் பணிவாக இன்மொழி பேசுபவர் எனப்பட்டனர். சரபங்கர் உரைப்படி இராமன் முதலானோர் சுதீக்கணர் சாலையில் முதலில் ஒரு முறை தங்கிப் பின் பத்து ஆண்டுகள் வேறுவேறு ஆச்சிரமங்களில் தங்கி மீண்டும் ஒருமுறை இவரைக் கண்டார் என வான்மீகம் கூறும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- There, when they of humble hearts bowed at the red feet
- of the sage who was like the sun,
- he spoke sweet words, 'Stay here';
- and in that fragrant grove the young heroes stayed.
What the poem says
Irāmaṉ and Ilakkuvaṉ, without any pride in being an emperor's sons, bow at the feet of Cutīkkaṇaṉ. The sage, who shines like the sun, warmly invites them to stay, and they rest in his fragrant hermitage grove.
The sun image picks up the earlier mention of his radiant body and also suggests the sage's power to dispel the darkness of ignorance. The commentary notes that in the Sanskrit telling the brothers visit this sage twice, before and after their ten years among the hermitages.