கம்பராமாயணம் 2736 · ஆரணிய 3.29

Section ஆரணிய காண்டம் / 3. அகத்தியப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வைகும் வைகலின் - (அவ்வாறு) தங்கியிருக்கும் பொழுது; மாதவன் - பெருந்தவம் செய்த சுதீக்கணன்; மைந்தன் பால் - இராமனிடத்தில்; செய்கை யாவையும் செய்து - செய்ய வேண்டிய உபசாரங்கள் எல்லாவற்றையும் செய்து; 'செல்வ! இவண் நீ எய்த யான் செய்தது எத்தவம்?' என்றனன் - செல்வமுடையவனே! இங்கு நீ எழுந்தருளும்படி நான் செய்தது எத்தகைய தவமோ என்று சொன்னான்; ஐயனும் அவற்கு அன்பினன் கூறுவான் - இராமனும் அம்முனிவனுக்கு அன்புடையவனாய்ச் சொல்லுவான்.

வைகல் - வேளை என்றுமாம். செல்வன் - அரசச் செல்வமுடையவன்; இம்மை மறுமை மோட்சச் செல்வங்களை அருள்பவன் என்றுமாம். தம்மிடம் வந்தவரிடம் இன்மொழி பேசி மகிழ்வுறச் செய்தல் தலையாய செய்கையாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. While they stayed there, the great ascetic did for the prince
  2. every service of hospitality, and said, 'Blessed one,
  3. what penance did I do that you should come here?'
  4. And the lord, full of love for him, would answer.

What the poem says

During their stay Cutīkkaṇaṉ performs every rite of welcome for Irāmaṉ and then wonders aloud what austerity of his could have earned him such a guest. Irāmaṉ replies with affection in the next verse.

The word for 'blessed one' can mean a prince rich in royal wealth, or one who grants the riches of this life, the next, and final release.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaikum vaikaliṉ, mātavaṉ, maintaṉpāl
ceykai yāvaiyum ceytu,'ivaṇ, celva! nī
eyta yāṉ ceytatu et tavam? 'eṉṟaṉaṉ;
aiyaṉum avaṟku aṉpiṉaṉ kūṟuvāṉ.