கம்பராமாயணம் 273 · பால 5.105
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஒருபகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து - பிரளயத்தின்போது எல்லா உலகங்களையும் தனது வயிற்றிலே அடக்கி; அருமறைக்கு உணர்வு அரும்அவனை - அரிய மறைகளாலும் தெரிந்து கொள்ள இயலாத பரம்பொருளாகிய அப்பரமனை; அஞ்சனக் கருமுகில் கொழுந்து எழில்காட்டும் சோதியை - அஞ்சனம் போன்று கரிய மேகக் கொழுந்தின் அழகைக் காட்டிநிற்கும் ஒளிவடிவாய்த் திகழ்பவனை; திறம்கொள் கோசலை திருஉறப் பயந்தனள் - திறமையுடைய கோசலை, உலகம் மங்கலம் பொருந்த ஈந்தாள்.
'பகல்' கால அளவைக்குறித்து நின்றது. பிரளயத்தின் போது, அப்பெருவெள்ளத்தே அழியாதபடி எல்லா உலகங்களையும் தனது வயிற்றிலே வைத்துப் பாதுகாத்துக் கொண்டு, அவ்வெள்ளநீரிலே ஆலிலையின் மீது ஒருபாலகனாய் இருந்த திருமாலின் தன்மையை இங்குக் கூறுகிறான். முகில் கொழுந்து: மேகக் கொழுந்து. 'கொழுந்து' இங்கு நுண்மை. 'திருஉறல்': உலகும், தானும் மங்கலம் அடைய. திறம் கொள்கோசலை: இங்குத்திறம் கோசலையின் புண்ணியத் திறத்தைக் குறிக்கும். பயந்தனள்: பெற்றனள். பொதிதல்: சேர்த்துக் கட்டிவைத்தல். சோதி: பேரொளிப் பிழம்பு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Him who, for a time, enclosed all the worlds within his belly,
- him whom even the rare Vedas cannot comprehend,
- the radiance that shows the beauty of a young dark cloud like collyrium,
- the virtuous Kōcalai bore, to the world's blessing.
What the poem says
Kōcalai gives birth to Irāmaṉ. The poet stresses who this child really is: Tirumāl, who at the end of an age holds all the worlds safe within his belly and floats as an infant on a banyan leaf on the waters of the deluge, and whom even the Vedas cannot fully know.
His dark complexion is compared to a fresh rain cloud, black as collyrium.