கம்பராமாயணம் 2742 · ஆரணிய 3.35
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வழியும் கூறி வரம்பு அகல் ஆசிகள் மொழியும் மாதவன் மொய்ம் மலர்த்தாள் தொழா - அகத்தியர் ஆச்சிரமத்திற்குச் செல்லும் வழியை விளக்கமாகச் சொல்லி எல்லையற்ற ஆசிமொழிகளைக் கூறும் பெருந் தவத்தோனாம் சுதீக்கணரின் வண்டுகள் மொய்க்கும் தாமரை மலர் போன்ற திருவடிகளை வணங்கி; பிழியும் தேனின் பிறங்கு அருவித்திரள் - அடையிலிருந்து பிழியப்படும் தேன் ஒழுக்குப் போன்று விளங்கிய அருவித் தொகுதிகள்; பொழியும் சோலை விரைவினில் போயினார் - நீரைச் சொரியும் தவச் சாலையிலிருந்து (இராமன் முதலோர்) விரைவாகச் சென்றனர். தேனின் பிறங்கு அருவித்திரள் என்பதைத் தேனே அருவியாக விளங்கும் மலர்வனம் எனக் கூறுவர். அங்குள்ள அருவிகளில் தேன் பெருக்கு இடையறாது ஓடிக்கொண்டிருக்கும் என்பர். சுதீக்கணரின் சோலை பல்வேறு இனிய பழங்களையும் மலர்களையும் செடி, கொடிகளையும் கொண்டது என வான்மீகம் கூறும். இச்சோலையை அகத்தியர் சோலை எனவும் கூறுவர். செல்லும் வழியில் அகத்தியரின் உடன்பிறப்பாம் சுதர்சன முனிவர் தவவனம் உள்ளது. அதற்குத் தெற்கே அகத்தியர் ஆச்சிரமம் உள்ளது எனச் சுதீக்கணர் இராமனிடம் கூறியதாகவும் வழியில் சுதர்சனரை இராமன் முதலியோர் பணிந்து சென்றதாகவும் முதனூல் கூறும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Telling them the way, and pronouncing blessings without bound,
- the great ascetic's feet, like flowers thronged by bees, they worshipped;
- and from the grove where clustered waterfalls pour down
- like honey pressed from the comb, they swiftly went.
What the poem says
Cutīkkaṇaṉ explains the road to Akattiyaṉ's hermitage and blesses them without limit. They bow at his feet and set off quickly from his grove, where the streams fall like honey squeezed from a comb.
Some read the image as a flower forest in which honey itself runs in streams. In the Sanskrit telling, the sage also directs them by way of the hermitage of Akattiyaṉ's brother, which lies on the road just north of Akattiyaṉ's own.