கம்பராமாயணம் 2741 · ஆரணிய 3.34

Section ஆரணிய காண்டம் / 3. அகத்தியப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அன்றியும் நின் வரவினை ஆதரித்து - அல்லாமலும் உன்னுடைய வருகையை விரும்பி; இன்று காறும் நின்று ஏமுறுமால் - இன்று வரையிலும் எதிர்பார்த்து இருந்து மகிழ்ச்சி அடைவார் ஆதலால், அவற் சென்று சேருதி - நீ போய் அகத்தியரை அடைவாயாக; செவ்வியோய் சேருதல் தேவர்க்கும் நன்று - சிறந்தவனே! அகத்தியரை அடைதல் விண்ணவர்க்கும் நல்லதே; யாவர்க்கும் நன்று எனா - மற்றெல்லார்க்கும் நல்லதே ஆகும் என்று கூறி,

இராமனின் வரவு இராவணாதிகளை அழித்து யாவர்க்கும் நன்மை புரியும் என மகிழ்வுற்றார். அரக்கரின் அழிவுக்கு உதவும் கருவிகளை இராமன் பெற வருவான் என எண்ணிய மகிழ்ச்சியுமாம். செவ்வியோய் - அழகுடையோய் என்றுமாம். ஏமுறல் - ஏக்கமடைதல் என்று பொருள் கூறி இராமன் எப்போது வருவான் என எதிர் பார்த்து ஏங்கினார் என்றும் உரைப்பர். முன்னுள்ள பாடலில் (2663) கூறிய 'நல்லதே நினைந்தாய்' என்றதனை மேலும் விரித்துக் கூறியதாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Moreover, longing for your coming,
  2. he has waited until this day in gladness; so to him
  3. go and join him. Your joining him, gracious one,
  4. is good for the gods, and good for all,' he said,

What the poem says

Cutīkkaṇaṉ adds that Akattiyaṉ has long been waiting eagerly for Irāmaṉ's arrival. Their meeting will benefit the gods and everyone else, for it will lead to the destruction of Irāvaṇaṉ and the demons.

The verb for Akattiyaṉ's waiting can also mean pining, so the line may say that he has been yearning to know when Irāmaṉ would come.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'aṉṟiyum niṉ varaviṉai ātarittu,
iṉṟukāṟum niṉṟu ēmuṟumāl: avaṟ
ceṉṟu cēruti; cērutal, cevviyōy!
naṉṟu tēvarkkum, yāvarkkum naṉṟu 'eṉā.