கம்பராமாயணம் 2753 · ஆரணிய 3.46

Section ஆரணிய காண்டம் / 3. அகத்தியப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எண்திசையும் ஏழ்உலகும் எவ் உயிரும் உய்ய - எட்டுத் திக்குகளும் ஏழு உலகங்களும் எல்லா உயிரினங்களும் நற்கதி அடைவதற்காக; குண்டிகையினில் பொரு இல் காவிரி கொணர்ந்தான் - தமது கமண்டலத்தில் ஒப்பற்ற காவிரி ஆற்றினைக் கொண்டு வந்த அகத்தியர்; இராமனை வரக்கண்டனன் - இராமனைத் தம்மிடம் நாடி வரக் கண்டு; புண்டரிக வாள் நயனம் கருணை கூர நீர் பொழிய நின்றான் - தாமரை போன்ற ஒளி பொருந்திய கண்களிலிருந்து இன்பக் கண்ணீர் சொரிய நின்றார்.

கூர - அதிகரிக்க. கருணை கூர என்பதனைக் கண்டனன் என்பதோடும் கூட்டலாம். குண்டிகை - தவசியர்க்குரிய வாய் குறுகிய சிறிய நீர்க்குடம். பொருவில் காவிரி - கங்கை முதலிய பிற புண்ணிய நதிகளும் இதில் படிந்து தம் பாவத்தைப் போக்கிக் கொள்ளும் தூய்மை வாய்ந்ததால் ஒப்பில்லாதது ஆயிற்று. 'கங்கையிற் புனிதமாகிய காவிரி' என்றார் பிறரும் (தொண்டரடிப் பொடியாழ்வார் திருமாலை. 23) பின்னரும் 'தெய்வப் பொன்னி' என இப்படலமும் கூறும் (2689).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He saw Irāmaṉ coming, and as compassion welled up,
  2. he stood with tears pouring from his bright lotus eyes:
  3. he who, so that the eight directions, the seven worlds and every creature might thrive,
  4. brought the peerless Kāviri in his water pot.

What the poem says

Akattiyaṉ sees Irāmaṉ approaching and stands with tears of joy streaming from his eyes.

The sage is identified by another of his legendary deeds: he carried the river Kāviri in his small water pot and released it to bless the south. The Kāviri is called peerless because, as another poet says, it is holier even than the Ganges; other sacred rivers bathe in it to wash away their sins.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṇṭaṉaṉ irāmaṉai varak karuṇai kūra
puṇṭarika vāḷ nayaṉam nīr poḻiya niṉṟāṉ;
eṇ ticaiyum ēḻ ulakum ev uyirum uyya
kuṇṭikaiyiṉil poru il kāviri koṇarntāṉ.