கம்பராமாயணம் 2752 · ஆரணிய 3.45

Section ஆரணிய காண்டம் / 3. அகத்தியப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'ஏனை உயிராம் உலவை யாவும் இடை வேவித்து
ஊன் நுகர் அரக்கர் உருமைச் சுடு சினத்தின்
கான அனலைக் கடிது அவித்து உலகு அளிப்பான்
வான மழை வந்தது 'என மைந்துறு மனத்தான் .

பொருள் · Meaning in Tamil

(பின்னும் அகத்திய முனிவர்) ஏனை உயிர் ஆம் உலவை யாவும் இடை வேவித்து - மற்றை உயிர்களாகிய மரங்கள் எல்லாவற்றையும் தமக்கு உணவு வேண்டும் பொழுதெல்லாம் வேகவைத்து; ஊன் நுகர் அரக்கர் - (அவற்றின்) உடலை உண்ணும் இராக்கதர்; உருமைச் சுடு சினத்தின் - இடியையும் சுடுகின்ற கோபமாகிய; கான அனலைக் கடிது அவித்து - காட்டுத் தீயை விரைவாக அழித்து; உலகு அளிப்பான் வானமழை வந்தது - உயிர்களைக் காப்பதற்கு விண்ணில் தோன்றும் மேகத்திலிருந்து மழை வந்தது; என முந்துறு மனத்தான் - என்று (இராமனைக் காண) முற்படுகின்ற மனத்தை உடையவன்.

ஏனைய உயிர் - அரக்கர் ஒழிந்த பிற உயிர்கள். ஊன் - ஆகுபெயராய் உடலுக்காகி வந்தது. அரக்கர்க்குத் தாக்கி எரிக்கும் இடியோடு கூடிய தீ உவமை. இராமனுக்குத் தீயை அவிக்கும் வானமழை உவமை. இலக்குவன் நாண் ஒலி கேட்டு இராமன் 'வீறாக்கிய பொற்கலன் வில்லிட ஆரம் மின்ன மாறாத் தலைச் சொல் மாரி வழங்கி வந்தான் கால் தாக்க நிமிர்ந்து புகைந்து கனன்று பொங்கும் ஆறாக் கனல் ஆற்றும் ஓர் அஞ்சன மேகம் என்ன (1726) வந்ததைக் கூறும் பாடலுடன் ஒப்பிடத்தக்கது. இது உருவக அணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Roasting at will all the trees that are the other living beings,
  2. the anger of the flesh-eating demons, which scorches even the thunderbolt,
  3. is a forest fire; to quench it swiftly and protect the world,
  4. the rain from the sky has come!' With that, his heart ran ahead.

What the poem says

Akattiyaṉ pictures the demons' fury as a forest fire, hotter than lightning, that burns up all other creatures as fire consumes trees, and Irāmaṉ as the monsoon rain that comes to put it out and save the world. His heart hurries ahead of him to meet Irāmaṉ.

The commentary compares an earlier verse where Irāmaṉ, coming to calm an angry Ilakkuvaṉ, is likened to a dark rain cloud that quenches a blazing fire.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ēṉai uyir ām ulavai yāvum iṭai vēvittu
ūṉ nukar arakkar urumaic cuṭu ciṉattiṉ
kāṉa aṉalaik kaṭitu avittu ulaku aḷippāṉ
vāṉa maḻai vantatu 'eṉa muntuṟu maṉattāṉ.