கம்பராமாயணம் 2751 · ஆரணிய 3.44
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(அவ்வகத்திய முனிவர்) ஆனா வெந்திறல் அரக்கர் விடவேர் முதல் அறுப்பான் மருத்துவன் வந்தனன் - நீங்காத கொடிய வலிமையுடைய இராக்கதர் எனும் நஞ்சின் வேரை அடியோடு அறுப்பதற்கு வைத்தியன் போன்ற இராமன் இங்கு வந்துவிட்டான்; (ஆகையால்) இமைப்பிலர் உய்ந்தனர் - தேவர்கள் பிழைத்தார்கள்; தவத்தோர் உயிர்த்தனர் - முனிவர்கள் உயிர் பெற்றார்கள்; அந்தணர் அறத்தின் நெறி நின்றனர்கள் - அந்தணர்கள் தருமமார்க்கத்தில் ஒழுகலாயினர்; எனத் தனி வலிப்பான் - என்று தானே நன்றாகத் துணிபவனானான். அரக்கராகிய நச்சு மரத்தை வேரோடறுக்க இராமன் வந்து விட்டானாதலால் தேவர்கள் நல்வாழ்வும், முனிவர்கள் உயிரும், அந்தணர்கள் அறநெறி வாழ்வும் பெற்றவராவர் எனத் துணிவு கொண்டார் அகத்தியர். திருமாலே தன்வந்தரியாகத் தோன்றிய ஆதி வைத்தியன் ஆதலாலும் பிறப்பு முதலிய நோய்களைப் போக்குபவன் ஆதலாலும் மருத்துவன் என இராமன் கருதப் பெற்றான். உய்ந்தனர் முதலிய இறந்தகால வினை முற்றுக்கள் தெளிவு பற்றி வந்த காலவழுவமைதி. உருவக அணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The unblinking gods are saved; the ascetics breathe again;
- the Brahmins stand firm in the path of dharma; for, to cut out
- the poison root of the demons of fierce, unending might,
- the physician has come!' So he resolved within himself.
What the poem says
Akattiyaṉ is certain that Irāmaṉ's arrival means the end of the demons. He speaks of it as already done: the gods are saved, the sages live again, the Brahmins can follow dharma, because the healer has come to dig out the poisonous root of the demon race.
Irāmaṉ is called a physician because Tirumāl himself appeared as Taṉvantari, the first physician, and because God cures the disease of rebirth. Using the past tense for a future certainty is an accepted poetic licence.