கம்பராமாயணம் 2750 · ஆரணிய 3.43

Section ஆரணிய காண்டம் / 3. அகத்தியப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'இரைத்த மறை நான்கினொடு இயைந்த பிற யாவும்
நிரைத்த நெடு ஞான நிமிர் கல்லில் நெடுநாள் இட்டு
அரைத்தும் அயனாரும் அறியாத பொருள் , நேர் நின்று
உரைத்து உதவுமால் 'எனும் உணர்ச்சியின் உவப்பான் .

பொருள் · Meaning in Tamil

(மேலும் அகத்தியர்) இரைத்த மறை நாலினொடு இயைந்த பிறயாவும் - பேரொலி கொண்டு ஒலிக்கும் நான்கு வேதங்களோடு பொருந்திய பிறசாத்திர நூல்களையும்; நிரைத்த நெடு ஞானம் நிமிர் கல்லில் நெடு நாள் இட்டு அரைத்தும் - முறையே பயின்ற சிறந்த அறிவாகிய உயர்ந்த அம்மியில் பலநாள் இட்டு அரைத்து ஆராய்ந்தும்; அயனாலும் அறியாத பொருள் நேர்நின்று உரைக்கு உதவும் - பிரமனாலும் அதன் சிறப்பைக் கண்டறிய முடியாத அப்பரம் பொருள் எதிரில் நின்று உரையாடற்கு அருள் செய்யும்; எனும் உணர்ச்சியின் உவப்பான் - என்கின்ற அறிவால் களிப்பவரானார்; ஆல் - அசை

பிரமன் முதலியவர்களும் வேதம் முதலிய நூல்களும் அறிதற்கு முடியாத பரம்பொருள் கண்முன் நின்று பேசுதற்குரிய நற்பேறு வாய்த்ததே என்ற உணர்ச்சியால் அகத்தியர் மனத்தில் மகிழ்ச்சி பொங்கியது. இயைந்த பிற என்பவை அவ் வேதங்களின் பொருளை நன்கறிய உதவும் கருவி நூல்களான மீமாம்சை, புராணம், நியாயம், தருமசாஸ்திரம் முதலியவை. மறை முதலிய நூல்களாம் அம்மியைக் கொண்டு தன் ஞானமாம் கல்லில் இட்டு அரைத்து என்றும் உருவகம் செய்வர். உரைக்குதவும் எனக்கொண்டு தொடுத்தலைக் குறிப்பர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The four resounding Vedas and all else joined to them,
  2. laid out on the tall grindstone of deep, ordered wisdom and ground there for ages,
  3. even so, the Being that Ayaṉ himself could not know will stand before me
  4. and grant me converse!' With that thought he rejoiced.

What the poem says

Akattiyaṉ's joy deepens. The Supreme Being, whom even Piramaṉ could not grasp though he ground the Vedas and all the related sciences on the grindstone of his wisdom for ages, is now coming to stand before him and speak with him.

The grindstone image is a metaphor for long and patient study. The 'other works joined to the Vedas' are the auxiliary disciplines such as ritual exegesis, the Purāṇas, logic and law.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'iraitta maṟai nāliṉoṭu iyainta piṟa yāvum
niraitta neṭu ñāṉam nimir kallil neṭu nāḷ iṭṭu
araittum ayaṉālum aṟiyāta poruḷ, nēr niṉṟu
uraikku utavumāl 'eṉum uṇarcciyiṉ uvappāṉ.