கம்பராமாயணம் 2749 · ஆரணிய 3.42
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(அத்தகைய அகத்தியர்) விண்ணினில் நிலத்தினில் விகற்ப உலகில் பேர் எண்ணினில் இருக்கினில் இருக்கும் என - தேவருலகிலும், பூவுலகிலும் மற்றும் பல உலகங்களிலும் வேதங்களிலும் உள்ளதாகும் என்று; யாரும் உள்நினை கருத்தினை என் கண்ணினில் உறப்பெறுவென் - யாவரும் மனத்தினுள்ளே நினைக்கப் பெறும் பொருளை (இராமன்) எனது கண்களால் இன்று காணப்பெறுவேன்; எனக் கொடு களிப்புறு மனத்தான் - என்று எண்ணி மகிழ்ச்சி அடையும் மனத்தை உடையவன் ஆனான்; ஆல் - வியப்பிடைச் சொல்.
விகற்ப உலகு என்றது, அதலம் முதலிய பல்வேறு உலகங்களை. எல்லாப் பொருள்களிலும் கரந்து உறைவதாலும் நினைவார் உளத்தில் அவர் நினையும் வடிவில் விரைந்து சேர்வதாலும் எல்லா மறைகளும் தெரிவிக்கும் பொருள் ஆதலாலும் இவ்வாறு கூறினார். எல்லா உலகங்களிலும் கலந்து விளங்கும் பரம்பொருளாம் இராமனைக் கண்ணால் காணும் பேறு பெற்றதால் அகத்தியர் களிப்புறு மனத்தராய் இருந்தார். கருத்து - பேரறிவாகிய இராமன் என்பர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'In heaven, on earth, in the many other worlds, in great
- reckonings and in the Rig, it dwells,' so all men say:
- that object everyone holds in the mind, I shall now behold
- with my own eyes!' So he thought, his heart rejoicing.
What the poem says
Akattiyaṉ, coming out to meet Irāmaṉ, rejoices at the thought that he is about to see with his own eyes the Supreme Being whom all the worlds and all the Vedas speak of, and whom everyone else can only contemplate inwardly.
The poet stresses that for the sage Irāmaṉ is God himself, present in all things and coming to devotees in the very form they meditate on.