கம்பராமாயணம் 2755 · ஆரணிய 3.48

Section ஆரணிய காண்டம் / 3. அகத்தியப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வேதியர்கள் வேதமொழி வேறுபல கூற - அந்தணர்கள் பல்வேறு வகைப்பட்ட வேத வாக்கியங்களைச் சொல்ல; காதல் மிக நின்று எழில் கமண்டலுவின் நல்நீர் மாதவர்கள் வீசி - அன்பு மிகுதலால் சூழ்ந்து நின்று அழகிய கமண்டலங்களிலுள்ள நல்ல நீரை மிக்க தவமுடையவர்கள் தெளித்து; நெடுமாமலர்கள் தூவ - அழகிய பெரிய மலர்களை மேலே சொரிய, (அகத்தியர் இராமனை); போது மணம் நாறு குளிர் சோலை கொடு புக்கான் - மலர்கள் மணம் வீசும் குளிர்ந்த சோலைக்குள் அழைத்துக் கொண்டு போனார்.

வேதமந்திரங்களைக் கூறி நன்னீர் தெளித்து மலர்தூவல் அம்முனிவர் செய்யும் உபசார வகை. கமண்டலு - கமண்டலம். குண்டிகை கரகம் எனவும் வழங்கப்பெறும். போது என்பது அப்பொழுது மலரும் நிலையில் உள்ள மலர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the Brahmins recited many Vedic verses,
  2. and the great ascetics, standing round in great love, sprinkled
  3. good water from their lovely water pots and strewed large fine flowers,
  4. he led him into the cool grove fragrant with opening blossoms.

What the poem says

Akattiyaṉ brings Irāmaṉ into his hermitage grove with full ceremony. The Brahmins chant Vedic verses, while the ascetics sprinkle water from their pots and shower him with flowers, the customary honours of a hermitage welcome.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vētiyarkaḷ vēta moḻi vēṟu pala kūṟa
kātal mika niṉṟu, eḻil kamaṇṭaluviṉ nal nīr
mā tavarkaḷ vīci, neṭu mā malarkaḷ tūva
pōtu maṇam nāṟu kuḷir cōlai koṭu pukkāṉ.