கம்பராமாயணம் 2756 · ஆரணிய 3.49

Section ஆரணிய காண்டம் / 3. அகத்தியப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பொருந்த அமலன் பொழில் அகத்து இனிது புக்கான் ;
விருந்து அவண் அமைத்தபின் விரும்பி முனி ,'மேனாள்
இருந்தவம் இழைத்த எனது இல்லிடையின் வந்து , என்
அருந்தவம் முடித்தனை ; அருட்கு அரச ! 'என்றான் .

பொருள் · Meaning in Tamil

அமலன் பொழிலகத்தும் பொருந்த இனிது புக்கான் - இராமன் சோலைக்குள் மனம் ஏற்றிட இனிமையாய்ப் புகுந்தவனாய்; அவன் விருந்து அமைத்த பின் விரும்பினன் - அம்முனிவர் விருந்திட்டு உபசரித்த பின் மகிழ்ந்திருந்தான்; விரும்பி (அப்போது அகத்தியர்) மகிழ்ந்து (இராமனைப் பார்த்து): அருட்கு அரச - கருணைக்குத் தலைவனே!; இருந்தவம் இழைத்த எனது இல்லிடையில் வந்து - மிக்க தவத்தைச் செய்த என்னுடைய வீட்டில் எழுந்தருளி; என் அருந்தவம் முடித்தனை என்றான் - ந்த அரிய தவத்தை நிறைவேற்றினாய் என்று கூறினார்.

இராமனை நோக்கி நீ இவ்வாறு எழுந்தருளியது' நான் முற்பிறவிகளிலும் இப்பிறவியிலும் செய்த நற்றவத்தால்' என்றும் 'நான் செய்யும் தவம் உன் வருகையால் இப்போது முற்றுப் பெற்றது' என்றும் கூறினார். இனி விரும்பினனாகிப் புக்கான் எனவுமாம். இராமன் பேரருள் கொண்டு தம் தவச்சாலைக்கு வந்ததால் 'அருட்கரசு' என்றார். இராமன் வருகையே பெரும் பேறு; இனிச் செய்யும் தவம் வேறு இல்லை என்பது புலப்பட 'அருந்தவம் முடித்தனை' என்றார். பெரியோர் தம் விருந்திடம் இவ்வாறு கூறி அவர் தம் பெருமையை உணர்த்தித் தம் அன்பின் பெருக்கையும் வெளிப்படுத்துவர். விருந்து - புதுமை; புதிதாய் வந்தவர்க்குச் செய்யும் உபசாரத்துக்கு ஆம். இருமடியாகுபெயர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The Pure One entered the grove gladly, as was fitting;
  2. after the sage had served him a guest's feast, he was content; and gladly
  3. the sage said, 'Coming into my dwelling, where I have wrought great penance,
  4. you have brought my hard penance to its end, King of grace!'

What the poem says

Irāmaṉ enters the hermitage and is fed and honoured as a guest. Akattiyaṉ then tells him that his coming is the fruit of all the sage's austerities in this and earlier lives, and that with it his penance is complete; nothing more remains to be gained.

The commentary notes that great men speak this way to honour a guest and to show the fullness of their love. Irāmaṉ is called 'King of grace' because he came to the hermitage out of pure kindness.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1porunta amalaṉ poḻilakattu iṉitu pukkāṉ;
viruntu avaṉ amaittapiṉ virumpiṉaṉ; 'virumpi
irun tavam iḻaitta eṉatu illiṭaiyil vantu, eṉ
arun tavam muṭittaṉai; aruṭku araca! 'eṉṟāṉ.