கம்பராமாயணம் 276 · பால 5.108
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
படம்கிளர் பல்தலைப் பாந்தள் - படம் பொலியும் பலதலைகளை உடைய பாம்பாகிய ஆதிசேடன்; ஏந்து பார் நடம் கிளர்தர - தாங்குகின்ற இவ்வுலகம் மகிழ்ந்து கூத்தாடவும்; மறை நாடகம் நவில - வேதமும் அந்தக்கூத்தொலியையே செய்யவும்; விடம்கிளர் விழியினாள் - விடம் போன்ற விழியை உடையவளான சுமித்திரை; மடங்கலும் மகமும் வாழ்வின் ஓங்கிட - சிங்க ராசியும் மக நட்சத்திரமும் வாழ்வில் மகிழ்ந்தோங்கவும்; மீட்டும் ஈன்றனள் - மறுபடியும் ஓராண்மகவைப் பெற்றாள்.
படம்கிளர் பஃறலைப்பாந்தள்: படங்கள் கிளர்ந்துள்ள பல தலைகளையுடைய பாம்பாகிய ஆதிசேடன். படம்: பணம். அதை உடையதாதலின் பாம்புக்குப் “பணி” என்பதும் ஒரு பெயருண்டு. கிளர்தல்: நெருங்கி ஓங்குதல். நாடகம்: கூத்து (நடனம்). மடங்கல்: சிங்கம். வாழ்வின் ஓங்கிட: வாழ்வு சிறக்க. 'விடம்கிளர் விழி': பெண்களின் கண்களை விடத்துக்கு ஒப்பிடுவது கவிமரபு. மீட்டும்: மறுபடியும். ஏந்துபார்: வினைத் தொகை. சுமித்திரை மக நட்சத்திரத்தில் சிங்க ராசியில் மீண்டும் ஒருபுத்திரனைப் பெற்றாள் என்பது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the earth held up by the serpent of many hooded heads
- rose in dance, and the Vedas chanted to that dance,
- and Leo and Makam rose high in good fortune,
- she of the poison-bright eyes gave birth once more.
What the poem says
Cumittirai bears a second son, Catturukkaṉ, under the star Makam (Maghā) and the sign of Leo. Even the earth, carried on the heads of the serpent Ātiśēṣaṉ, dances.
Comparing women's eyes to poison, for their power to wound, is a poetic convention.