கம்பராமாயணம் 275 · பால 5.107

Section பால காண்டம் / 5. திருவவதாரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தளை அவிழ் தரு உடைச் சயிலகோபனும்
கிளையும் அந்தரம் மிசைக் கெழுமி ஆர்த்து எழ,
அளை புகும் அரவினோடு அலவன் வாழ்வு உற
இளையவள் பயந்தனள் இளைய வீரனை.

பொருள் · Meaning in Tamil

தளை அவிழ் தருஉடை - அரும்புகள் மலரும் கற்பகமரத்தை உடைய; சயில கோபனும் - மலைகளைச் சினந்து, அவற்றின் இறகுகளைத் துண்டித்த இந்திரனும்; கிளையும் அந்தரமிசை கெழுமி ஆர்ப்பு உற - அவனது தமர்களான தேவர்களும் வானுலகிலே கூடி ஆரவாரம் செய்யவும்; அளைபுகும் அரவினோடும் - புற்றில்புகும் பாம்பாகிய ஆயில்யத்தோடு; அலவன் வாழ்வு உற - நண்டாகிய கடக ராசியும் வாழ்வுபெற; இளையமென்கொடி இளையவற் பயந்தனள் - கோசலை, கைகேயி இருவருக்கும் இளையவளாகிய மெல்லிய கொடிபோன்ற சுமித்திரை இளையவனைப் பெற்றாள்.

தளை: கட்டு (மலர்க்கட்டு). அரும்பு. தரு: மரம். சயிலம்: மலை. கோபன்: சினந்தவன். கிளை: உறவினர் (உவமை யாகு பெயர்). கெழுமி: நெருங்கி. அளை: புற்று. அலவன்: நண்டு. இளையவன்: ராமனுக்கு இளையவனான இலக்குவன். கொடி: கொடிபோன்றவள் (உவமையாகுபெயர்). சுமித்திரை ஆயில்ய நட்சத்திரத்தில், கடக ராசியில் ஒரு மகனைப் பெற்றாள். ஆயில்யம் ஆதிசேடனுக்குரியதென்பர். ஆதிசேடன் அம்சமான இலக்குவன் இந்த நட்சத்திரத்தில் பிறந்தது பொருத்தமாகும். சுமித்திரையை 'இளையமென்கொடி' என்றதால், மூவரிலும் இளையவள் சுமித்திரையே என்பது கம்பன் கருத்தாதல் காண்கிறோம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the wrathful foe of mountains, whose trees burst their buds,
  2. and his kin crowded the sky and shouted,
  3. and the snake that enters its hole, together with the crab, gained good fortune,
  4. the youngest, the soft creeper, gave birth to the younger one.

What the poem says

Cumittirai, called 'the youngest, the soft creeper', gives birth to Ilakkuvaṉ. Intiraṉ, the 'enemy of mountains' who once clipped their wings, lord of the wish-granting tree, celebrates with the gods.

The 'snake that enters its hole' is the star Āyilyam (Āśleṣā), linked with the serpent Ātiśēṣaṉ, of whom Ilakkuvaṉ is an incarnation; the 'crab' is Cancer. The commentary notes that Kampaṉ makes Cumittirai the youngest queen.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1taḷai aviḻ taruvuṭaic cayilakōpaṉum
kiḷaiyum antaramicaik keḻumi ārppuṟa,
aḷai pukum araviṉōṭu alavaṉ vāḻvuṟa
iḷaiyavaṟ payantaṉaḷ iḷaiya meṉ koṭi.