கம்பராமாயணம் 2761 · ஆரணிய 3.54
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இராமன் (அகத்தியரிடம்) வருக்க மறையோய்! - தொகுதியாகிய வேதங்களை உடையவனே! செருக்கு அடை அரக்கர் புரிதீமை - ஆணவம் அடைந்த இராக்கதர் செய்யும் கொடுமை எல்லாம், சிதைவு எய்தித் தருக்கு அழிதரக் கடிது கொல்வது சமைந்தேன் - அழிவை அடைந்து களிப்பு அழியும்படி விரைவில் கொல்ல ஆயத்தமாக உறுதி பூண்டேன், (ஆகையால்); அவர் வரும் திசையில் முந்துற்று - அவர்கள் வருகின்ற (தென்) திக்கில் முற்படச் சென்று, இருக்கை நலம் - இருப்பது நன்மை தரும், நிற்கு அருள் என் - உம் விருப்பம் யாது, என்றனன் - என்று கேட்டனன்.
வருக்கமறை என்பது நான்கு வேதங்களையும் அவற்றைச் சார்ந்த அங்கங்கள் பிறவற்றையும் கூறியதாம். அரக்கர்களைக் கொல்வதால் அகத்தியர் ஆச்சிரமத்தின் தூய்மை கெடும். ஆதலால் 'முந்துற்று இருக்கை நலம்' என்றான். செருக்கடை என்று கொண்டு போர்க்களம் எனப் பொருள் கூறுவாருமுளர். 'கொல்வது சமைந்தேன்' என்றது இராமன் முன் தண்டக வன முனிவர்களுக்கு அபயமளித்துறுதி கூறியதை நினைவூட்டும். (2647-2654).
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'So that the evil worked by the arrogant demons is undone
- and their pride destroyed, I have resolved to kill them swiftly;
- master of the collected Vedas! It is better that I go ahead and stay
- in the direction from which they come; what is your gracious wish?' asked Irāmaṉ.
What the poem says
Irāmaṉ explains that he has vowed to kill the arrogant demons quickly. Rather than stay at Akattiyaṉ's hermitage, he thinks it better to go further toward the region the demons come from, and asks the sage's advice.
The commentary suggests that he does not want the bloodshed of battle to defile the sage's holy grove. His resolve recalls the promise of protection he gave the Taṇṭaka sages earlier.