கம்பராமாயணம் 2760 · ஆரணிய 3.53
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆழி உழவன் புதல்வ - ஆணைச் சக்கரத்தை உலகெங்கும் செலுத்தும் தயரதன் மகனே!; இனி மறை வாழும் - (நீ இங்குத் தங்குவதால்) இனி மேல் வேதங்கள் வாழ்வு பெறும், மனுநீதி வாழும் - மனு தருமசாத்திரமும் வாழும்; அறம் வாழும் - எல்லா வகைத் தருமங்களும் நிலை பெறும்; தாழும் இமையோர் உயர்வர் - அரக்கர் கொடுமையால் தாழ்வுற்ற தேவர்கள் உயர்ந்த நிலை அடைவர்; தானவர்கள் தாழ்வார் - அரக்கர்கள் தாழ்வடைவார்கள்; ஏழ் உலகும் வாழும் - ஏழு உலகங்களும் வாழ்வடையும்; ஐயம் இலை மெய்யே - இதில் சந்தேகம் இல்லை; உண்மையே!; இங்கு உறைதி என்றான் - இவ்விடத்தில் தங்குவாயாக என்று அகத்தியர் கூறினார்.
வாழும் மறை என்றதால் எக்காலத்தும் அழியாத வேதங்கள் என்பர் சிலர். பதினெட்டு நீதி நூல்களில் தலையாயது மனுநூல் ஆகையால் அதனை எடுத்துரைத்தார். ஆழி உழவன் - ஆணைச் சக்கரமாம் ஏரைக் கொண்டு உலகு முழுவதையும் உழுபவன் எனத் தயரதனின் ஆட்சிப் பெருமை கூறப்பட்டது. தானவர் என்பவர் தனு என்பாளிடம் தோன்றியவர் எனும் பொருளால் அசுரர்களைச் சுட்டும். அசுரர்போல அரக்கர்கள் கொடியவர்கள் எனவே அவரையே சுட்டியது என்பர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The Vedas will live; the law of Manu will live; dharma will live;
- the humbled gods will rise; the Dānavas will be brought low;
- son of him who ploughs with the wheel of rule! There is no doubt; it is true!
- The seven worlds will live; stay here now,' he said.
What the poem says
Akattiyaṉ assures Irāmaṉ that if he stays in the region, the Vedas, the law code of Manu and dharma itself will flourish; the gods, humiliated by the demons, will rise again, and their enemies will fall.
Tacarataṉ is called 'he who ploughs with the wheel', meaning that his wheel of royal command furrows the whole earth like a plough. The Dānavas are properly the Asura race, but here the word stands for the demons.