கம்பராமாயணம் 2759 · ஆரணிய 3.52
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஐய! ஈண்டு உறைதி - ஐயனே! இங்கு நீ தங்கி இருப்பாயாக; இனி இவ்வயின் இருந்தால் - இனிமேல் இவ்விடத்தில் நீ இருந்தால், வேண்டியன மாதவம் விரும்பினை முடிப்பாய் - நீ விரும்பிய பெரிய தவங்களை விரும்பியவாறே செய்து முடிப்பாய்; தூண்டுசின வாள் நிருதர் தோன்றியுளர் என்றால் - தூண்டப்பட்ட கோபத்தோடு கூடிய வாளேந்திய அரக்கர்கள் வந்தனர் என்றால்; மாண்டு உக, மலைந்து - அவர்கள் அழிந்து கீழே சிதறப் போர் செய்து; எமர் மனத்துயர் துடைப்பாய் - எம்போன்ற முனிவர்களின் மனத்துன்பத்தைப் போக்குவாய்.
வேண்டியன மாதவம் என்பது இராமனின் சிறிய தாய் கைகேயி கூறிய வண்ணம் ஆகும். தவங்கள் என்பர் (1601). வாள்நிருதர் - வாள்போல் கொடிய அரக்கர் எனலுமாம். வாள் எனில் கொடுமையும் ஆம். நீ இங்கே இருந்தால் நீயும் தவம் செய்யலாம். எம்போன்ற முனிவர் தவத்திற்கு இடையூறு செய்ய வரும் அரக்கர்களை நீ அழிப்பதால் அவர்களும் தவம் செய்ய இயலும் என அகத்தியர் கூறுவதால் தவச் செயல் கெடாது நிலைபேறு எய்தலை இராமன் வரவுணர்த்தும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Stay here, my lord. If from now on you remain in this place,
- you will accomplish the great penance you desire, as you wish;
- and if the demons with their swords and roused fury appear,
- you will fight them till they fall dead, and wipe away the grief in our hearts.'
What the poem says
Akattiyaṉ invites Irāmaṉ to stay. Here he can carry out the austerities required of him, and if the sword-bearing demons come to disturb the sages, he can destroy them and free the hermits from fear.
The 'penance you desire' recalls Kaikēyi's order that Irāmaṉ live as an ascetic in the forest. His presence will let both him and the sages practise their penance undisturbed.