கம்பராமாயணம் 2771 · ஆரணிய 4.5

Section ஆரணிய காண்டம் / 4. சடாயு காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தூய்மையன் - (உள்ளும் புறமும்) தூய்மை உடையவன்; இருங்கலை துணிந்த கேள்வியன் - மிக்க கல்வியையும் தெளிந்த துணிவையும் கொண்ட கேள்விச் செல்வமுமுடையவன்; வாய்மையன் - உண்மை உடையவன்; மறுஇலன் - குற்றம் இல்லாதவன்; மதியின் கூர்மையன் - அறிவின் நுட்பமுடையவன்; ஆய்மையின் மந்திரத்து அறிஞன் ஆம் என - ஆராய்ச்சியுடைய மந்திராலோசனையில் வல்ல அறிவுள்ள அமைச்சனைப் போல; சேய்மையின் நோக்குறு - மிகத் தூரத்தில் உள்ளவற்றைக் கண்டறியும்; சிறுகணான் தனை - சிறிய கண்ணுடையவன் ஆகிய சடாயுவை,

இருங்கலை துணிந்த கேள்வியன் என்பது பல சாத்திரங்களையும் கற்றும் தக்கோரிடத்துக் கேட்டும் தெளிவு உடையவன், கற்றவை எல்லாம் பின்னர்க் கேள்வியால் துணிவுபெறும். வாய்மை என்பது மெய்யின் தன்மை. மறு என்பது காமம், வெகுளி, மயக்கம் முதலியவை. மதியின் கூர்மை - நுட்பத்தினுள்ளும் நுட்பமாக நுழைந்து ஆயும் நுண்ணறிவு. மந்திரத்து அறிஞன் என்பதன் விளக்கமாக அயோத்தியா காண்ட மந்திரப் படலத்தில் உற்றது கொண்டு மேல் வந்து உறு பொருள் உணரும் கோளார்' (1319) 'தெரியும் காலம் மும்மையும் உணர வல்லார் (1321) எனக் கூறப்பட்டது. சடாயு அறிவு நுட்பமும் கட்புல நுட்பமும் வாய்ந்தவர் என்பதைச் சேய்மையின் நோக்குறு சிறுகணான்' என்ற தொடர் காட்டும். உலகவழக்கில் 'கழுகுக் கண்ணுடையவன்' என்று கூறுதல் இதனை மேலும் விளக்கும். சேயதை நோக்கல் என்பதற்குக் காலமிடையிட்டவற்றையும் தேயமிடையிட்டவற்றையும் அறியும் நுண்ணறிவு என்றும் பகை வெல்லும் அறிவு எனவும் கூறுவர். பறவையுள் பிறப்பினும் சடாயு உடல் தூய்மையும், கல்வி கேள்வியும், நுண்ணறிவும் பெற்று சேய்மைப் பொருளை அறியவல்லார் என்பதாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Pure, with learning tested by hearing in the great arts,
  2. truthful, without blemish, keen of intellect,
  3. like a wise minister skilled in searching counsel,
  4. him of the small eyes that look far into the distance.

What the poem says

Caṭāyu is described like an ideal royal counsellor: pure in body and mind, deeply learned and confirmed in his learning by listening to the wise, truthful, free of desire, anger and delusion, and sharp of intellect.

Just as a wise minister foresees what lies ahead, the vulture's small eyes see what is far away. The commentary notes the everyday phrase 'eagle-eyed', and that his far sight may cover distance in time as well as in space.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tūymaiyaṉ, iruṅ kalai tuṇinta kēḷviyaṉ,
vāymaiyaṉ, maṟu ilaṉ, matiyiṉ kūrmaiyaṉ,
āymaiyiṉ mantirattu aṟiñaṉ ām eṉac
cēymaiyiṉ nōkkuṟu ciṟu kaṇāṉtaṉai.