கம்பராமாயணம் 2770 · ஆரணிய 4.4

Section ஆரணிய காண்டம் / 4. சடாயு காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மால் நிற விசும்பு எழில் மறையத் தன் மணிக்
கால் நிறச் சேயொளி கதுவக் கண் அகல்
நீல் நிற வரையினில் பவள நீள் கொடி
போல் நிறம் பொலிந்திடப் பொலிகின்றான் தனை .

பொருள் · Meaning in Tamil

மால்நிற விசும்பு எழில் மறைய - கருநிறமுடைய வானத்தின் அழகு மறையவும்; தன்மணிக் கால் நிறச் சேயொளி கதுவ - தன்னுடைய அழகிய கால்களின் நிறத்தின் சிவந்த ஒளி பொருந்தவும்; கண் அகல் நீல் நிற வரையினில் - இடம் அகன்ற நீல நிறத்தையுடைய மலையில், பவள நீள் கொடி போல் நிறம் பொலிந்தென - நீண்ட பவளக் கொடி போன்று அழகிய நிறத்தோடு விளங்குதல் போல; பொலிகின்றான் தனை - விளங்குகின்ற சடாயுவை,

விசும்பின் மால்நிறம் சடாயுவின் மேனி நிறத்தால் மறைந்தது எனும் போது அவ்வொளி மேலே வீசுவதைச் சுட்டும். காலின் செந்நிறம் கீழ்ப்புறம் வீசிக் கரிய மலையில் பவளக் கொடி படர்ந்தது போல் விளங்கி நிற்கும் நிலை அதன் சிறப்பைக் கூறும். சேய் என்பது செம்மை என்பதன் விகாரம். நீல் என்பது நீலம் என்பதன் - கடைக்குறை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So that the beauty of the dark sky was hidden, while the red glow
  2. of his jewel-bright legs caught upon the broad
  3. blue mountain, like a long coral creeper
  4. shining in its colour: him who shone like that.

What the poem says

The description of Caṭāyu continues. The radiance of his body rising upward outshines the dark sky, while the red of his legs spreads down over the blue-black mountain he sits on, like a long creeper of coral laid across it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māl niṟa vicumpu eḻil maṟaiyat taṉ maṇik
kāl niṟac cēyoḷi katuvak kaṇ akal
nīl niṟa varaiyiṉil pavaḷa nīḷ koṭi
pōl niṟam polinteṉa polikiṉṟāṉtaṉai.