கம்பராமாயணம் 2769 · ஆரணிய 4.3
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
முந்து ஒரு கருமலை முகட்டு முன்றிலின் - முன்னொரு காலத்தில் ஒரு பெரிய கரியமலையின் உச்சியிடத்தில்; அந்தம் இல் கனைகடல் - அளவில்லாத ஒலிக்கும் திருப்பாற்கடலில்; சந்திரன் ஒளியொடு தழுவ - மதியின் ஒளியுடன் பொருந்தும்படி: அமரர் சார்த்திய நாட்டிய - தேவர்கள் சேர்த்து நிறுத்திவைத்த; மந்தரகிரி என வயங்குவான் தனை - மந்தர மலை போல விளங்கும் சடாயுவை,
சடாயுவுக்கு முறையே மந்தர கிரி அவர் தோற்றத்திற்கு, சந்திரனின் நிலவொளி அவர் உடலின் தோற்ற இன்பத்திற்கும் உவமை. கழுத்திலிருந்து காணப் பெறும் வெண்மை நிறத்திற்கும் நிலவு உவமை ஆம் என்பர். சடாயு ஒரு ஆலமரத்தில் தங்கியிருந்ததாக வான்மீகம் கூறும். இங்குக் கருமலை முகட்டு முன்றில் என உளது.
அமரரும் அசுரரும் அமுதமெழப் பாற்கடலைக் கடைந்த போது மந்தர கிரியை மத்தாக நட்டனர் என்பது புராணம். முன்னர் இளங்கதிரவனை ஒளிக்கு உவமை கூறி இங்கு நிலவொளியைக் கூறுவதைக் காணும்போது சடாயுவின் காட்சி நிலவொளி போல் இன்பமூட்டியது எனக் கொள்ளலாம். முன்றில் - இல்முன், இலக்கணப்போலி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- On the open summit of a great dark mountain, as of old
- the moon with its light was set to embrace
- Mount Mantaram, planted by the immortals in the endless roaring sea:
- him who shone like that Mantara mountain.
What the poem says
Caṭāyu, perched on the top of a dark mountain, is now compared to Mount Mantaram, which the gods and demons planted in the Ocean of Milk as a churning rod when they churned it for the nectar of immortality, with the moon resting on its peak.
The mountain stands for the bird's great bulk, the moonlight for the pleasing glow of his body and perhaps the white feathers at his neck. Where the poet earlier likened him to the fierce rising sun, he now uses the gentle moon, suggesting how pleasant the sight was.