கம்பராமாயணம் 2768 · ஆரணிய 4.2
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
உருக்கிய சுவணம் ஒத்து - தீயில் காய்ச்சி உருக்கப் பெற்ற பொன்னைப் போன்றுள்ள; உதயத்து உச்சிசேர் அருக்கன் - உதயகிரியின் சிகரத்தைச் சேர்ந்த இளஞ்சூரியன்; இவ் அகல் இடத்து அலங்கு திக்கு எல்லாம் - இந்த அகன்ற உலகில் பொருந்திய எல்லாத் திசைகளையும்; தெரிப்புறு செறி சுடர்ச் சிகையினால் - விளங்கச் செய்யும் அடர்ந்த தன் ஒளிக் கீற்றுக்களால்; சிறை விரித்து இருந்தனன் என - சிறகுகளை எங்கும் விரித்துக் கொண்டு இருந்தான் என்று சொல்லும்படி, விளங்குவான் தனை - விளங்கும் சடாயுவை,
உதயகிரிக்கு உருக்கிய பொன் உவமை. உருக்கிய பொன் ஒத்து விளங்குவான் எனவும் உரைப்பர். சடாயுவுக்கு இளங்கதிரவனும் அவன் விரித்த சிறகுகளுக்குக் கதிர்களும் உவமை. சடாயு தன் சிறகுகளை விரித்து ஒரு மலை உச்சியில் தங்கியிருந்த காட்சியை இவ்வாறு காட்டுவார் கவிஞர். சடாயுவின் நிறம் பொன்னிறம் என்பது இக்கவியால் அறியலாம். வடமொழியில் அம்மலைக்கு உதயம் என்றே பெயர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like molten gold, on the summit of the eastern mountain,
- the sun, over all the shining quarters of this wide earth,
- with the dense flaming rays that make them visible, had spread
- its wings and settled, so it seemed: him who shone like that.
What the poem says
The first sight of Caṭāyu. Perched on a hilltop with his wings spread, the golden bird looks like the newly risen sun on the peak of the eastern mountain, whose rays reach out over every direction like outstretched wings.
The image tells us that Caṭāyu's plumage is golden. The verse continues a single sentence running over several verses, describing the bird whom the travellers see.