கம்பராமாயணம் 2773 · ஆரணிய 4.7

Section ஆரணிய காண்டம் / 4. சடாயு காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கோள் இருநான்கினோடு ஒன்று கூடின
ஆளுறு திகிரிபோல் ஆரத்தான் தனை ,
நீளுறு மேருவின் நெற்றி முற்றிய
வாள் இரவியில் பொலி மௌலியான் தனை ,

பொருள் · Meaning in Tamil

இரு நாலினோடு ஒன்று கூடின கோள் - எட்டோடு ஒன்று சேர்ந்து ஒன்பதாகிய கிரகங்களை: ஆளுறு திகிரி போல் - ஆளுதலைக் கொண்ட சிம்சுமாரம் எனும் துருவச்சக்கரம் போல் விளங்கும்; ஆரத் தான் தனை - நவரத்தின மாலையை உடையவனை; நீளுறு மேருவின் நெற்றி முற்றிய - உயர்ந்த மேருமலையின் உச்சியில் பொருந்திய; வாள் இரவியின் பொலி மௌலியான் தனை - ஒளியுடைய கதிரவன் போல விளங்குகின்ற கிரீடத்தை உடைய சடாயுவை;

சடாயுவின் உருவிற்கு மேருவும், தலைக்குச் சிகரமும், கிரீடத்திற்குக் கதிரவனும் உவமை. சடாயு கழுகரசன் ஆதலால் முடியும் ஆரமும் கூறப் பெற்றன. ஆரத்திற்கு சிம்சுமாரம் எனும் துருவசக்கரம் உவமை ஆகிறது. அச்சக்கரம் நவக்கிரகங்களை இயக்குவது என்பது புராணச் செய்தி, நவக்கிரகங்கள் நவமணிக்கு உவமை ஆயின. நிறவேற்றுமையைச் சுட்டுகிறது. நவக்கிரகங்கள் முறையே சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது. நவமணிகளாவன: கோமேதகம், நீலம், பவழம், புட்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம்.

துருவன் நடுவிலிருந்து சுற்றிக் கொண்டு காற்றின் வடிவான கயிறுகளால் கட்டப் பெற்ற நவக்கிரகங்களையும் சுற்றும் சக்கரம், ஆளுறு திகிரி எனப்படும். இவ்வுவமைகளால் சடாயுவின் கழுத்தில் விளங்கும் உரோமமும், தலையில் விளங்கும் கொண்டையும் சிறப்பிக்கப் பெற்றன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Him whose necklace was like the ruling wheel that holds
  2. the planets, twice four and one joined together;
  3. him whose crown shone like the bright sun
  4. resting on the summit of lofty Mēru.

What the poem says

As a king among birds, Caṭāyu is given royal ornaments. The ring of feathers at his neck is like a necklace of the nine gems, compared to the celestial wheel centred on the pole star that carries the nine planets, each of a different colour like the gems. His crest is like a crown, shining like the sun on the peak of Mount Mēru, while his great body is the mountain itself.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kōḷ iru nāliṉōṭu oṉṟu kūṭiṉa
āḷuṟu tikiri pōl ārattāṉtaṉai,
nīḷuṟu mēruviṉ neṟṟi muṟṟiya
vāḷ iraviyiṉ poli mauliyāṉtaṉai,