கம்பராமாயணம் 278 · பால 5.110
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சிலதியர் அரசன் மாட்டு ஓடினர் - பணிப்பெண்கள் தசரத மன்னனிடம் ஓடிச் சென்றனர்; உவகை கூறி நின்று ஆடினர் - மக்கட் பிறந்த செய்தியை மன்னருக்குச் சொல்லி நின்று களித்து ஆடினர்; அந்தணாளர்கள் கூடினர் - அரண்மனை வேதியரெல்லாம் ஒருங்கு கூடினார்கள்; நாளொடு கோளும் நின்றமை - நாள்களும், கோள்களும் நின்ற தன்மையை; நாடினர் - ஆராய்ந்து அறிந்து; உலகினி நவை இன்று என்றனர் - இப்புத்திரர்களது பிறப்பினால் இவ்வுலகம் தீமையிலிருந்து காக்கப் பெறும் என்றனர்.
மாடு: அண்மை. உவகை: மகிழ்ச்சி. சிலதியர்: பணிப்பெண்கள். நாள்: நட்சத்திரம். கோள்: கிரகம் (சூரியன் முதலான ஒன்பது கோள்கள்). அந்தணாளர்கள் தமது கணித நூற்புலமையால் நாளும் கோளும் நின்ற நிலையை ஆராய்ந்து - இப்பிள்ளைகளின் பிறப்பால் உலகம் இனி நன்மை அடையும் என்றனர். பணிப் பெண்கள் பிள்ளைகள் பிறந்த செய்தியை மன்னருக்குத் தெரிவித்தனர் என்பதும், அந்தணாளர்கள் நாளையும், கோளையும் ஆய்ந்தறிந்து இனி உலகம் நன்மை அடையும் என்றனர் என்பதும் கூறப்பட்டது. நவை: குற்றம்; தீமையுமாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Running to the king, speaking the joyful news, the maidservants
- stood and danced; the Brahmins
- gathered, examined how the stars and planets stood,
- and declared, 'From now on the world is free of harm.'
What the poem says
The palace maids run to Tacarataṉ with the news and dance for joy. The court Brahmins cast the princes' horoscopes and announce that the world will now be free from evil.