கம்பராமாயணம் 279 · பால 5.111

Section பால காண்டம் / 5. திருவவதாரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மா முனி தன்னொடு, மன்னர் மன்னவன்,
ஏம் உறு புனல் படிந்து, இசைந்த ஒண் பொருள்
ஆம் முறை வழங்கி, வெண் சங்கம் ஆர்ப்பு உறக்,
கோமகர் திரு முகம் குறுகி நோக்கினான்.

பொருள் · Meaning in Tamil

மன்னர் மன்னவன் ஏமுற - மன்னர் மன்னனாகிய தயரதன் மகிழ்ச்சி கொண்டு; புனல்படீஇ - குளிர்ந்த நீரிலே நீராடியபின்; வித்தொடு இன்பொருள் - நெல்லும் மற்றும் இனிய பல பொருள்களையும்; தாம் உற வழங்கி - மிகுதியாகத் தானம் செய்து; வெண் சங்கம் ஆர்ப்புற - வெண் சங்குகள் முழங்க; மாமுனி தன்னொடும் - குலகுருவான வசிட்ட முனிவனோடும்; குறுகி கோமகார் திருமுகம் நோக்கினான் - சென்று, அரசிளங் குமரர்களின் அழகிய முகங்களைப் பார்த்தான்.

மாமுனி: வசிட்டன். மா: பெருமை. மன்னர் மன்னவன்: சக்கரவர்த்தி. ஏம்உற: மகிழ்ச்சி தோன்ற. புனல்படீஇ: புனல் படிந்து (அளபெடை). குழந்தை பிறந்ததைக் கேட்டவுடன் தந்தை நீரிலே நீராடி, பின் நெல் முதலியவைகளைத் தானம் செய்து, பிறகு குழந்தையின் முகம் காண வேண்டும் என்பது மரபு. இதனால் தென்புலத்தாராகிய பிதிர்த் தேவதைகள் மகிழ்ந்து ஆசி கூறுவராம். 'வித்தொடு இன் பொருள்': நெல் முதலிய எட்டுவித மங்கலப் பொருள்கள் எனவும் கூறுவர். மகார்: மக்கள். குறுகி: நெருங்கி. தயரதன் குலகுருவோடும் சென்று குழந்தைகளைப் பார்த்தான் என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With the great sage, the king of kings,
  2. having bathed with joy, and given grain and other sweet things
  3. in abundance, while white conches sounded,
  4. drew near and gazed on the lovely faces of the princes.

What the poem says

Following custom, before seeing his newborn sons a father bathes and gives gifts of grain and other auspicious things; this pleases the ancestors, who bless the child.

Only then, with his guru Vacittaṉ, does Tacarataṉ go to see the faces of his four sons.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mā muṉitaṉṉoṭu, maṉṉar maṉṉavaṉ,
ēmuṟap puṉal paṭīi, vittoṭu iṉ poruḷ
tām uṟa vaḻaṅki, veṇ caṅkam ārppuṟa,
kō makār tirumukam kuṟuki nōkkiṉāṉ.