கம்பராமாயணம் 280 · பால 5.112

Section பால காண்டம் / 5. திருவவதாரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'இறை தவிர்ந்திடுக பார் யாண்டு ஒர் ஏழ் ஒடு ஏழ்,
நிறை நிதிச் சாலை தாழ் நீக்கி யாவையும்
முறை கெட வறியவர் முகந்து கொள்க; என
அறை பறை!' என்றனன், அரசர் கோமகன்.

பொருள் · Meaning in Tamil

யாண்டு ஓர் ஏழ் பார்இறை தவிர்ந்திடுக - ஏழாண்டுகள் நாட்டில் திறை செலுத்துவதைச் சிற்றரசர் தவிர்க்க; நிதி நிறைதரு சாலை - செல்வம் நிறைந்த பொருள் பாதுகாப்பறையை; தாள் நீக்கி - தாழ்ப்பாளை அகற்றித் திறந்து வைத்து; யாவையும் வறியவர் முறைகெட முகந்து கொள்க எனா - வரன் முறையில்லாது எல்லாச் செல்வத்தையும் ஏழை எளியவர்கள் முகந்து கொள்ளுங்கள் என்று; அரசர் கோமகன் பறை அறை என்றனன் - மன்னர் மன்னனான தயரதன் பறை அறைந்து தெரிவியுங்கள் என்றான்.

இறை: சிற்றரசர் செலுத்தும் கப்பம் (மக்கள் செலுத்தும் வரி எனவும்) கூறுவர். யாண்டு: ஆண்டு. நிதிநிறை தரு சாலை: பொக்கிஷம். முறைகெட: இன்னார் இனியார் என்ற வரன்முறை இன்றி யாவரும் ஒருங்கே என்பது பொருள். வறியவர்: வறுமையாளர். கொள்க, தவிர்ந்திடுக என்பன வியங்கோள் வினைமுற்றுகள். அறை: ஏவல் வினைமுற்று. எனா: என்று (செயா என்ற வாய்பாட்டு வினையெச்சம்). பறையறைதல்: எல்லோருக்கும் பொதுப்பட அறிவித்தல்.

பிள்ளைகள் பிறந்த மகிழ்ச்சியால் ஏழாண்டுகள் திறை தவிர்க எனவும், யாவையும் முறைகெட முகந்து கொள்க எனவும் பறை அறையுமாறு மன்னர் மன்னன் கட்டளையிட்டான் என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Let tribute on the land be remitted for seven years; open the bolts
  2. of the treasure houses brimming with wealth, and let the poor
  3. scoop up everything without regard to order; so
  4. beat the drum,' said the son of kings.

What the poem says

In his joy Tacarataṉ has it proclaimed by drum that tribute is remitted for seven years and that the royal treasuries are thrown open for the poor to take whatever they want, with no distinction of rank.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'iṟai tavirntiṭuka pār yāṇṭu ōr ēḻ; niti
niṟaitaru cālai tāḷ nīkki yāvaiyum
muṟai keṭa vaṟiyavar mukantu koḷka; eṉā
aṟai paṟai!' eṉṟaṉaṉ, aracar kōmakaṉ.