கம்பராமாயணம் 2782 · ஆரணிய 4.16
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
எனப்பல நினைப்பு இனம் மனத்துள் எண்ணுவான் - என்று பல எண்ணங்களின் தொகுதியை உள்ளத்தில் நினைப்பவரும், சினப்படை வீரர்மேல் செல்லும் அன்பினான் - கொடிய ஆயுதங்களை உடைய அவ்வீரரிடத்துச் செல்வதற்கான அன்பினை உடையவருமான சடாயு; கனப்படை வரிசிலைக் காளை நீவிர் யார் - வலிய ஆயுதமாகிய கட்டமைந்த விற்படை கொண்ட காளை போன்றவர்களே நீங்கள் யாவர்?; மனப்பட எனக்கு உரை வழங்குவீர் என்றான் - என் உள்ளத்தில் பதியும்படி மறுமொழி கூறுங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.
பலவேறு பட்ட ஐயவுணர்கள் கொண்ட சடாயு தம் நண்பன் தயரதனின் சாயலை இராமலக்குவரிடம் கண்டதால் அவ்விருவர் மீதும் மிக்க பரிவு கொண்டதால் 'நீவீர் யார்?' எனக் கேட்டதுடன் 'என் மனத்தில் பதியும்படி கூறுங்கள்' என வேண்டிக் கொண்டார். நினைப்பு இனம் - பல எண்ணங்களின் கூட்டம். இவற்றின் விளக்கத்தை முந்திய பாடல்களில் கண்டோம் (2700 - 2704).
ஆங்கிலம் · English translationAI
Translation
- Turning over many such thoughts in his mind,
- his love going out to the heroes with their fierce weapons,
- he said, 'Young bulls with mighty weapons and banded bows, who are you?
- Tell me, so that it settles in my mind.'
What the poem says
After all his wondering, Caṭāyu, already feeling affection for the two because of their likeness to his friend, asks them directly who they are, and begs them to tell him clearly.