கம்பராமாயணம் 2796 · ஆரணிய 4.30
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தருணம் கொள் பேர் ஒளியீர் - இளமை பூண்ட பெரும் ஒளியுடையவர்களே!; யான் அருணன் தன் புதல்வன் - நான் அருணனது மகன்; அவன் படரும் உலகு எல்லாம் படர்வேன் - அவன் செல்லும் உலகங்களெல்லாம் செல்லும் ஆற்றல் உடையேன்; ஆழி இருள் மொய்ம்பு கெடத் துரந்த தயரதற்கு இன் உயிர்த் துணைவன் - ஆணைச் சக்கரத்தைக் கொண்டு பகை இருளின் வலிமை கெடும்படி செலுத்திய தயரதனுக்கு இனிய உயிர் நண்பன்; இமையோரோடும் - தேவர்களோடு; வருணங்கள் வகுத்திட்ட காலத்தே வந்து உதித்தேன் - மற்ற சாதிகளை வகைப்படுத்திய பொழுதில் நான் வந்து பிறந்தேன்; கழுகின் மன்னன் - கழுகுகளுக்கெல்லாம் அரசன்; சம்பாதி பின் பிறந்த சடாயு என்றான் - சம்பாதி என்னுமவனுக்குத் தம்பியாம் சடாயு என்ற பெயருடையேன் என்றார்.
தருணம் - இளமை. அயோத்தியா காண்டத்தில் தைலமாட்டு படலத்தில் 'தருண வஞ்சிக் கொம்பு அழுது ஒசிந்தன என, சிலர் குழைந்தார் (1853) என்ற தொடரில் தருணம் இப் பொருளில் வந்துள்ளது. ஒளியைத் தயரதனுக்கும் இருளைப் பகைவர்க்கும் கொள்ளலாம். தயரதனை ஒளி என்று கூறாவிடினும் குறிப்பால் கொள்ள இடமுளது. அருணன் - சூரியனின் சாரதி, காசிபனுக்கும் விநதைக்கும் பிறந்தவன். இவன் அரம்பையுடன் கூடிடச் சம்பாதி, சடாயு பிறந்தனர். சம்பாதி - நன்றாகப் பறப்பவன். கழுகின் வேந்தனாம் சம்பாதி எனக் கூறுவோரும் உளர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'I am the son of Aruṇaṉ; I range all the worlds he ranges;
- I am the dear friend, close as life, of Tacarataṉ, who drove his wheel of rule to destroy the might of darkness; along with the gods,
- at the time when the orders of beings were laid down, I came to be born; king of the vultures,
- O you of youthful radiance, I am Caṭāyu, born after Campāti,' he said.
What the poem says
Caṭāyu introduces himself to the brothers. He is the son of Aruṇaṉ, the charioteer of the sun, and can fly wherever the sun travels. He was born at the beginning of creation along with the gods, is king of the vultures, the younger brother of Campāti, and was the cherished friend of Tacarataṉ, who drove away the darkness of his enemies with his wheel of command.