கம்பராமாயணம் 2808 · ஆரணிய 4.42
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பின்னரும் - பிறகும்; அப்பெரியவன் பெய் வளை அன்னம் அன்ன அணங்கினை நோக்கினான் - அப்பெரியோராம் சடாயு, அணிந்த வளையல்களையுடைய அன்னம் போன்ற தெய்வப் பெண்ணாம் சீதையைப் பார்த்தவராய்; மன்னர் மன்னவன் மைந்த - சக்ரவர்த்தி தயரதனின் மகனே!; இவ்வாணுதல் இன்னள் என்ன இயம்புதியால் என்றான் - இந்த ஒளி பொருந்திய நெற்றியை உடையவள் இன்னாள் என்று சொல்வாய் என்றார்.
பெரியவன் - பண்பு, கல்வி, வாழ்நாள் முதலியவற்றால் பெரியவர். பெய் வளை அன்னம் என்பது இல்பொருள் உவமை. அணங்கு - உருவகம். நோக்கினான் - முற்றெச்சம். வாள்-நுதல்-வாணுதல், ஒளிபொருந்திய நெற்றியை உடையவள்; அன்மொழித் தொகை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Then the great one looked at the goddess,
- like a swan wearing bangles,
- and said, 'Son of the king of kings, tell me
- who this lady with the shining brow is.'
What the poem says
Caṭāyu now turns to Cītai and asks Irāmaṉ who she is. The poet calls her a goddess and a swan that wears bangles, a comparison with something that cannot exist, used to stress her unearthly grace.