கம்பராமாயணம் 2812 · ஆரணிய 4.46

Section ஆரணிய காண்டம் / 4. சடாயு காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
''

பொருள் · Meaning in Tamil

(அது கேட்ட சடாயு) பெரிதும் நன்று - (அகத்தியர் கூற்றுப்படி அங்குச் சென்று தங்குவது) மிகவும் நன்மை தரத்தக்கது; அப்பெருந்துறை வைகி நீர் மாதவம் புரிதிர் போதுமின் என்று - அந்தப் பெரிய ஆற்றின் துறையிடத்துத் தங்கி நீங்கள் சிறந்த தவத்தைப் புரிவீர்களாக வாருங்கள்; யான் அது தெரிவுறுத்துவென் - யான் அவ்விடத்தை உங்களுக்குக் காட்டுவேன் என்று கூறி; திண் சிறை விரியும் நிழலில் அவர் செல்ல விண் சென்றனன் - தன் வலிய சிறகுகளின் பரந்த நிழலின் கீழ் அவர்கள் நடந்து வரும்படி வானில் பறந்து சென்றார்.

'பெரிதும் நன்று' என்பது உலக நன்மை தோன்ற இராவண வதத்தைக் குறிப்பால் உணர்த்தி நிற்கிறது. சடாயு வாயிலாக அதற்குத் தோற்றுவாய் எழுந்தது எனலாம். இனிப் பெரிது நன்று அப்பெருந்துறை என ஆற்றின் பெருமையை உரைப்பாரும் உளர். 'புனை சடை முடியின'ராகச் சடாயு அவர்களைக் கண்டதால் (2700) 'புரிதிர் மாதவம்' என்றார். தம் மக்கள் துயருறாமல் தந்தை காப்பது போல் அவர்கட்குச் சடாயு நிழல் தந்து நின்றார்.

'விண் சென்றனன்' என்ற தொடர் காப்பிய வளர்ச்சியில் இக்கதை மாந்தர் இராவணனுடன் சீதையைக் காக்கப் போரிட்டு மடியும் நிலையைக் குறிப்பாக உணர்த்துகிறது எனலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'That is very good; stay at that great landing and there
  2. practise your great penance; come along! I will
  3. show you the place,' he said, and so that they might walk in the shade
  4. spread by his strong wings, he rose into the sky.

What the poem says

Caṭāyu approves the plan and offers to show them the way. He flies overhead with his great wings spread, so that the travellers walk below in his shade, like a father keeping his children from the heat.

The commentary finds a double hint here: 'very good' points to the good that will come to the world from Irāvaṇaṉ's destruction, and 'he rose into the sky' foreshadows Caṭāyu's death in battle while trying to save Cītai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1''peritum naṉṟu; ap perun tuṟai vaiki, nīr
puritir mā tavam; pōtumiṉ! yāṉ atu
terivuṟuttuveṉ '' eṉṟu avar tiṇ ciṟai
viriyum nīḻalil cella, viṇ ceṉṟaṉaṉ.