கம்பராமாயணம் 2813 · ஆரணிய 4.47
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஆய சூழல் அறிய உணர்த்திய - அத்தகைய பஞ்சவடி எனும் இடத்தை அறியும்படி தெரிவித்த; அத்தூய சிந்தை தோம்இல் குணத்தினான் - அந்தத் தூய்மையான மனமும் குற்றமற்ற நற்பண்புகளும் கொண்ட சடாயு; போய பின்னை - அவ்விடம் விட்டுச் சென்ற பின்னர்: பொரு சிலை வீரரும் ஏய சோலை இனிது சென்று எய்தினார் - போர் புரிதற்குரிய வில்லை உடைய வீரர்களாம் இராமலக்குவர் அங்கு அமைந்திருந்த சோலையை மகிழ்ந்து போய் அடைந்தனர்.
ஏய சோலை - அகத்தியர் அவர்களைத் தங்குமாறு கூறிய சோலை எனலுமாம். தூய சிந்தை தோமில் குணத்தை முன்னரே தூய்மையான (2694) என்ற பாடலில் உணர்த்தியுள்ளார். இத்தொடர் சடாயுவை நன்கு விளக்குதற்குரிய நயமுடையது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When he who had made known the place clearly,
- he of pure mind and flawless virtues,
- had gone, the heroes with their warring bows
- went happily and reached the appointed grove.
What the poem says
Caṭāyu, pure in heart and faultless in character, points out Pañcavaṭi and then leaves them. The brothers, with Cītai, go on gladly and reach the grove Akattiyaṉ had named for them.