கம்பராமாயணம் 2823 · ஆரணிய 5.9

Section ஆரணிய காண்டம் / 5. சூர்ப்பணகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

செம்பு அராகம் பட - தாமிரத்தின் செந்நிறம் போலச் செந்நிறம் பொருந்த; செறிந்த கூந்தலாள் - அடர்ந்த தலை மயிரை உடையவளும்; வெம்பு அராகம் தனி விளைந்த மெய்யினாள் - வெப்பம் கொள்ளும் (காம) ஆசை ஒப்பிலாது வளர்ந்து தழைத்த உடம்பை உடையவளுமான சூர்ப்பணகை, உம்பர் ஆனவர்க்கும் - தேவர்களுக்கும்; ஒண் தவர்க்கும் - சிறந்த தவத்தை உடைய முனிவர்களுக்கும்; இம்பர் ஆனவர்க்கும் - இவ்வுலக மக்களுக்கும்; ஓர் இறுதி ஈட்டுவாள் - ஒப்பற்ற ஓர் அழிவைச் செய்ய வல்லவளும் ஆன (சூர்ப்பணகை),

செம்பராகம் படச் செறிந்த கூந்தலாள் - செம்பட்டை மயிருடையவள். செந்நிறம் இவள் கூந்தல் முன் நிற்க மாட்டாது அழிவுறும்படி. அடர்ந்த கூந்தலுடையவள் என்றுமாம். செம் - பராகம் எனப் பிரித்துச் சிவந்த புழுதி நிறம் பொருந்த எனக் கூறுவாருமுளர். 'வெம்ப ராகு' எனக் கொண்டு திருமாலை வஞ்சித்து அழுது பெறக் கருதிய இராகு போல் சூர்ப்பணகை இராமனை வஞ்சித்து இன்பம் பெறக் கருதினள் என்பாருமுளர். இராகுவின் கொடுமை இவளுக்கும் ஏற்புடைத்து. இராமவதாரத்தின் பயன் சூர்ப்பணகை வாயிலாக நடைபெற்றது என்பதை முன் செய்யுளாலும் (2739) இச் செய்யுளாலும் உணர்த்துகிறார். இது போன்று முன்னரும் 'அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும் துரக்க நல்லருள் துறந்தனள் தூய் மொழி மடமான்' எனக் கைகேயியைப் பற்றிக் கூறியமை (1484) காண்க. இவ்வாறே பின்னர் இலக்குவன் பற்றிக் கூறும்போது 'தேவர் செய் தவத்தினால் செம்மல் ஏகினான் (3337) என்பதால் இக்காப்பிய நெறி புலப்படும். அவர்களின் செய்கை உலக நன்மைக்குக் காரணமாயிற்று என இதனால் உணரலாம். இதனடிப்படையில் 'ஓர் உறுதி ஈட்டுவாள்' எனப் பாடம்கொண்டு ஒப்பற்ற நன்மையைத் தேடித் தருவாள் என்று பொருள் காண்பர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. She of thick hair, red as copper,
  2. she whose body was ripe with a burning lust beyond compare,
  3. who would bring about one great end for the gods above, for the bright ascetics,
  4. and for those of this sea-girt earth below;

What the poem says

The description of Cūrppaṇakai continues. Her hair is thick and coppery red, her body consumed by a burning lust. She will become the cause of a decisive ending for gods, sages and mortals alike.

The commentary explains the paradox: the 'end' she brings about is Irāvaṇaṉ's destruction, which is the very purpose of Irāmaṉ's incarnation. One reading even has 'a great good' instead of 'an end', since through her evil the world's good is achieved, just as with Kaikēyi earlier.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cem parākam paṭac ceṟinta kūntalāḷ,
vempu arākam taṉi viḷainta meyyiṉāḷ,
umpar āṉavarkkum oṇ tavarkkum ōta nīr
impar āṉavarkkum ōr iṟuti īṭṭuvāḷ.