கம்பராமாயணம் 2824 · ஆரணிய 5.10

Section ஆரணிய காண்டம் / 5. சூர்ப்பணகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வெய்யது ஓர் காரணம் உண்மை மேயினாள் - கொடிதான ஒரு காரணம் தன்னிடம் உள்ளதைப் பொருந்தியவளாய்; (அதனால்) தமியள் அவ்வனத்து வைகலும் வைகுவாள் - தனியளாய் அக்காட்டில் நாளும் வாழ்ந்து வருபவளாய்; இவ் உலகு எலாம் நொய்தின் நுழையும் நோன்மையாள் - இவ்வுலகம் முழுவதும் விரைவாகப் புகுந்து செலும் வலிமையுடையவளாய் உள்ள சூர்ப்பணகை; இராகவன் இருந்த சூழல்வாய் எய்தினள் - இராமன் தங்கிய பூஞ்சாலையிடத்து வந்தாள்.

வெய்யதோர் காரணம் - இராவணன் சூர்ப்பணகையின் கணவனாம் விதயுச்சிவனைக் கொன்ற கொடுமைக்குப் பழி வாங்குதல் காரணமாம். இனிச் சூர்ப்பணகை கொண்ட கொடிய காம இச்சையைக் குறிப்பாகக் காரணம் எனக் கூறியதுமாம். மேலும் சூர்ப்பணகை கணவனை இழந்து வருந்திய போது இராவணனின் விருப்பப்படி கரன் முதலிய இராக்கதர் துணையோடு தண்டகாரணியத்தில் சனத்தானம் எனுமிடத்தில் தான் விரும்பிய போதெல்லாம் திரிந்து முனிவர்களை வருத்த வேண்டும் என்ற காரணமுமாம். இராவணன் முதலியோர் குலத்துடன் அழியும் கொடிய ஊழ்வினை காரணம் எனலுமாம். இராமன் சீதையைப் பிரியும்படியான காரணமுமாம். தமியள் என்பது அவ்வனம் முழுதும் தனியே உலவிவருபவள் என்றும், பெண்களுக்குரிய அடக்கம், கட்டுப்பாடு இன்றி விருப்பப்படி திரிபவள் என்றுமாம். இரகு என்ற அரசன் மரபில் தோன்றியதால் இராகவன் என்ற பெயர் பெற்றான். சூழல் வாய் - என்பது ஏழன் உருபாய் இடப்பொருளுணர்த்தி நின்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. she who held within her a cruel cause,
  2. who lived alone in that forest day after day,
  3. who had the strength to pass swiftly through all this world,
  4. came to the place where Irākavaṉ was staying.

What the poem says

The long sentence about Cūrppaṇakai ends: she arrives at Irāmaṉ's hermitage. She roams the forest alone and can travel anywhere in the world at speed, and she carries within her a cruel motive.

The commentary offers several readings of that motive: revenge on Irāvaṇaṉ, who had killed her husband; her own fierce lust; her licence to roam the Daṇḍaka region harassing sages; or simply the fate that would destroy her whole clan and part Irāmaṉ from Cītai. Irāmaṉ is called Irākavaṉ as a descendant of King Raghu.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1veyyatu ōr kāraṇam uṇmai mēyiṉāḷ,
vaikalum tamiyaḷ av vaṉattu vaikuvāḷ,
noytiṉ iv ulaku elām nuḻaiyum nōṉmaiyāḷ,
eytiṉaḷ, irākavaṉ irunta cūḻalvāy.