கம்பராமாயணம் 2839 · ஆரணிய 5.25

Section ஆரணிய காண்டம் / 5. சூர்ப்பணகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'கரந்திலன் இலக்கணம் எடுத்துக் காட்டிய
பரம்தரு நான் முகன் பழிப்பு உற்றான் அரோ !
இரந்து இவன் இணை அடிப் பொடியும் ஏற்கலாப்
புரந்தரன் உலகு எலாம் புரக்கின்றான் 'என்பாள் .

பொருள் · Meaning in Tamil

இலக்கணம் கரந்திலன் எடுத்துக் காட்டிய பரம் தரு நான்முகன் - உத்தம இலக்கணங்களை எல்லாம் (இவனுடம்பில்) அமைத்து விளங்கச் செய்த மேன்மை பொருந்திய நான்முகன்; பழிப்பு உற்றான் அரோ - இகழப்பட்டவன் ஆனான் அல்லவா? (ஏனெனில்); இவன் இணை அடிப் பொடியும் இரந்து ஏற்கலாப் புரந்தரன் - இவனுடைய திருவடித்தூசின் பெருமையை வேண்டியும் பெற முடியாத தேவேந்திரன்; உலகு எலாம் புரக்கின்றான் என்றாள் - மூவுலகங்களையும் ஆட்சி புரிகின்றான் என்று கருதினாள். (சூர்ப்பணகை).

காட்டிய - உண்டாக்கிய, படைத்த. பழிப்புற்றமை - இவன் கால் தூசிக்கு ஒப்பாகாத இந்திரன் மூவுலகுக்கும் அரசுரிமை பெற்றுள்ளான். உத்தம இலக்கணங்கள் கொண்ட இவனோ காட்டிலே இரிகின்றான். எனவே அவ்வாறு படைத்த பிரமனின் தொழில் பயனற்றதாக இகழ்ச்சிக்கு இடந்தந்தது.

பரந்தரு நான் முகன் - பரம் பொருளாம் திருமாலால் பெறப்பட்ட பிரமன் எனலுமாம். தேவேந்திரன் தேவருலகிற்கு மட்டுமின்றி மூவுலகிற்கும் அரசன் என்பது புராணமரபு.

அரோ - வினாப் பொருளில் வந்தது; இதனைப் பொது நோக்கில் அசை என்பாரும் உளர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "The four-faced creator, who set out every mark of excellence in him
  2. and hid none, has earned only blame!
  3. For Indra, who could not win even the dust of his two feet though he begged,
  4. rules over all the worlds," she said.

What the poem says

Cūrppaṇakai's thought turns into a complaint against Brahmā, the four-faced creator. He gave Irāmaṉ every auspicious bodily mark, yet Irāmaṉ wanders the forest, while Indra, who is not worth the dust of his feet, rules the three worlds. So the creator's careful work has come to nothing, and he deserves reproach.

The phrase for Brahmā can also be read as "he who was born of the Supreme," that is, from Viṣṇu.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'karantilaṉ ilakkaṇam eṭuttuk kāṭṭiya
param taru nāṉmukaṉ paḻippu uṟṟāṉ arō!
irantu ivaṉ iṇai aṭip poṭiyum ēṟkalāp
purantaraṉ ulaku elām purakkiṉṟāṉ 'eṉṟāḷ.