கம்பராமாயணம் 2844 · ஆரணிய 5.30
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பங்கயச் செல்வியை மனத்துப் பாவியா - செந்தாமரை மலரில் வாழும் திருமகளை உள்ளத்தில் தியானித்து; அங்கையின் ஆய மந்திரத்தை ஆய்ந்தனள் - தனக்குச் சித்தியாய் இருந்த அத்திருமகளின் மூலமந்திரத்தைச் செபித்தாள்; (அதன் பயனாய்) திங்களின் சிறந்து ஒளிர் முகத்தள் செவ்வியள் - முழுமதியைவிட மேம்பட்டு விளங்கும் முகமுடையவளும் அழகியவளுமாய்; பொங்கு ஒளி விசும்பினில் பொலியத் தோன்றினாள் - மிக்க ஒளி வானில் பரவி விளங்க வடிவம் மாறி வெளிப்பட்டாள்.
திங்களின் சிறந்து - மதியைப் போலச் சிறந்து - என ஒப்புப் பொருளிலும் கொள்வர். செவ்வி - பருவ அழகின் நிறைவு. அங்கையின் ஆய மந்திரம் என்பது முன்னர்த் தனக்குச் சித்தியாயுள்ள மந்திரம் - திருமகள் மந்திரத்தைத் தியானத்தோடு கூறி மிகுந்த அழகு பெற்றாள். அழகின் செல்வியாக உள்ள திருமகளை நினைந்து வேண்டும் அழகிய வடிவம் பெற்றாள் என்பதாம். முதல் நூலில் சூர்ப்பணகை பார்க்கப் பயங்கரமான முகமுடையவள்; பேரியைப் போலப் பருத்த வயிற்றை உடையவள்; பார்க்கப் பயங்கரமான கண்களை உடையவள்; நெருப்புக் கொழுந்து போல் சிவந்து விரிந்து குறுகிய தலைமயிரை உடையவள்; பார்ப்பவர்களுக்குச் சொல்ல முடியாத வெறுப்பை உண்டாக்கும் வடிவு கொண்டவள்; அவள் குரல் கேட்பவர்களை மூர்ச்சை அடையச் செய்யும்; மிகவும் வயது சென்றவள்; கபடமாகப் பேசுபவள்; கெட்ட நடத்தை உடையவள்; குரூபிகளுக்குள் முதலானவள் என வருணிக்கப் பெறுவாள். (வான்மீகம் ஆரண்ய. 17 ஆம் சருக்கம்) இதற்கு நேர் எதிரான வடிவம் இப்பாடலிலும் அடுத்த பாடலிலும் (2762) தீட்டப் பெற்றுள்ளது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Meditating in her heart on the lady of the lotus,
- she recited the mantra that she held as her own,
- and with a face more radiant than the moon, in full bloom of beauty,
- she appeared, a great light spreading across the sky.
What the poem says
Cūrppaṇakai calls on Lakṣmī, the goddess of the lotus and of beauty, and recites the mantra she had mastered long before. Through its power she takes on a form of dazzling loveliness, her face brighter than the full moon, and she appears out of the sky.
The contrast with Vālmīki is deliberate. There Cūrppaṇakai is old, pot-bellied and terrible to look at. Kampaṉ instead has her approach Irāmaṉ in disguise as a beautiful young woman, which this verse and the next describe.