கம்பராமாயணம் 2845 · ஆரணிய 5.31
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பஞ்சி - செம்பஞ்சும், ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க - விளங்குகின்ற மிகச் செழித்த தளிர்களும் (செம்மையிலும் மென்மையிலும் தமக்கு ஒப்பாகாமல்) வருந்தும்படி; செஞ்செவிய கஞ்சம் நிகர் சீறடியள் ஆகி - சிறந்த அழகுள்ள தாமரைக்கு ஒப்பான சிறிய பாதங்கள் உடையவள் ஆகி; அம் சொல் இள மஞ்ஞை என - அழகிய சொல்லுடைய இளமையான மயில் போலவும்; அன்னம் என - அன்னம் போலவும்; மின்னும் வஞ்சி என - விளங்குகின்ற வஞ்சிக் கொடி போலவும்; நஞ்சம் என - கொடிய விடம் போலவும்; வஞ்சமகள் வந்தாள் - வஞ்சனை புரியும் சூர்ப்பணகை அங்கு இராமன் முன் வந்தாள்.
பஞ்சி எனினும் பஞ்சு எனினும் ஒக்கும். செம்பஞ்சிக் குழம்பூட்டப் பெற்ற தளிரும் ஒவ்வாது வருந்தும்படி எனவும் உரைப்பர். பஞ்சியும் பல்லவமும் வருந்தக் காரணம் அவை ஒளி, நிறம், மென்மை, குளிர்ச்சி ஆகிய பண்புகளால் அவள் அடிகளுக்கு ஒப்பாகாமையாம். செவ்விய என்பது செவிய என இடைக்குறையாய் வந்தது. சிறுமை - அடி - சீறடி. மயில் சாயலுக்கும், அன்னம் நடைக்கும் வஞ்சிக்கொடி, துவண்ட நிலைக்கும் நஞ்சு கொடுமைக்கும் உவமை ஆயின. மயிலை நடைக்கும் திருமுருகாற்றுப்படை உவமையாகக் கொண்டு 'மயில் கண்டன்ன மட நடை மகளிர்' (திருமுருகு. 205, 310) என்று கூறும். நஞ்சு குளிர்ச்சியாக இருந்தும் கொல்லும் என்பர் (நீதிநெறி. 3).
இதில் பல உவமைகள் மாலை போல் வந்ததால் மாலையுவமை அணியாம். இப்பாடலில் காணும் சந்த இன்பம் மெல்லொலி நயம் வாய்ந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Making cotton dyed red and the bright, cool, lush young shoots wilt in shame,
- with small feet like the fine red lotus,
- like a young peahen of lovely speech, like a swan, like a gleaming
- vañci creeper, like poison, the woman of deceit came.
What the poem says
Now in her borrowed form, Cūrppaṇakai walks towards Irāmaṉ. Her small feet are so soft and red that red-dyed cotton and tender leaf-shoots, the usual comparisons, are put to shame.
The last two lines string several similes together: a young peahen for her grace, a swan for her gait, the slender vañci creeper for her swaying form, and poison for her deadliness, which is hidden beneath the sweetness. The verse is admired for its soft, flowing sound.