கம்பராமாயணம் 2846 · ஆரணிய 5.32

Section ஆரணிய காண்டம் / 5. சூர்ப்பணகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பொன் ஒழுகு பூவில் உறை பூவை எழில் பூவை
பின்னு எழில் கொள் வாள் இணை பிறழ்ந்து ஒளிர் முகத்து ஓர்
கன்னி எழில் கொண்டது கலைத் தட மணித் தேர்
மின் அழிவு இல் தன்மையது விண் இழிவது என்ன .

பொருள் · Meaning in Tamil

பொன் ஒழுகு பூவில் உறை பூவை - பொன்னிறமாய் விளங்கும் செந்தாமரை மலரில் வாழும் திருமகளின் அழகும்; எழில் பூவை - அழகு மிக்க நாகணவாய்ப் புள்ளின் அழகும்; பின் எழில் கொள் - தனக்குப் பிற்படும்படி சிறந்த அழகைக் கொண்ட; வாள் இணை பிறழ்ந்து ஒளிர் முகத்தாள் - இரண்டு வாள்கள் போலக் கண்கள் மாறி மாறி ஒளி வீசும் முகத்தை உடையவளாம் சூர்ப்பணகை; கன்னி எழில் கொண்டது - இளம் பெண்ணின் அழகைக் கொண்டதாக உள்ள; கலைத் தட மணித்தேர் - அழகிய சீலைகளால் ஒப்பனை செய்யப் பெற்ற பெரிய அழகிய தேர்; மின் இழிவ தன்மை இது - மின்னல் கீழிறங்கும் இயல்பை உடையதாய்; விண் இழிவது என்ன - வானிலிருந்து கீழே இறங்கி வருகிறது எனக் கூறும்படி,

பொன் - பொன்னிறமான மகரந்தப் பொடி எனவும் கூறுவர். பொன் ஒழுகு என்பதற்கு அழகு மிக்க வழிகின்ற என்றுமாம். கன்னி எழில்கொண்ட கலைத்தடமணித் தேரையுடைய மின் போல விண்ணில் இழிந்தது எனக் கொள்வர். மின் - ஒளியுமாம். கன்னி - இளமை, புதுமை, அழியாத தன்மை. சூர்ப்பணகை இளம் பெண் வடிவையும் மேகலை சூழ்ந்த அல்குலையும் கொண்ட மின்னல் வானிலிருந்து இறங்கி வந்தது போல் வந்தாள் எனவும் கூறுவர். பொன், பூவை, வாளிணை, தேர் உவமையாகு பெயராகக் கொண்டு பொருள் காண்பர். இதில் உருவக உயர்வு நவிற்சி அணியும், இல்பொருள் உவமை அணியும் உள்ளன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Surpassing the beauty of the lady who dwells in the gold-dripping lotus and of the lovely pūvai bird,
  2. her face flashing with eyes that dart like a pair of swords,
  3. as though a jewelled chariot, adorned with cloth and bearing a maiden's beauty,
  4. were coming down from the sky in the way lightning descends.

What the poem says

Cūrppaṇakai's beauty surpasses even that of Lakṣmī, who lives in the lotus, and of the pūvai, a mynah prized for its looks. Her eyes flash this way and that like two swords.

Her descent is compared to a jewelled, cloth-draped chariot or a flash of lightning coming down from the sky. Some read the chariot as the lightning's own vehicle, or as an image of her girdled hips. The verse mixes hyperbole with comparisons to things that cannot exist.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1poṉ oḻuku pūvil uṟai pūvai eḻil pūvai
piṉ eḻil koḷ vāḷ iṇai piṟaḻntu oḷir mukattāḷ
kaṉṉi eḻil koṇṭatu kalait taṭa maṇit tēr
miṉ iḻiva taṉmai itu viṇ iḻivatu eṉṉa.