கம்பராமாயணம் 2850 · ஆரணிய 5.36
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பேர் உழைய நாகர் உலகில் - பெரிய இடமுடைய நாகங்கள் வாழும் பாதலத்திலும்; பிறிது வானில் - அதனில் வேறான சுவர்க்கலோகத்திலும், பார் உழையின் - நில உலகத்திலும்; இல்லது ஒரு மெல் உருவு பாரா - இல்லாததான ஒப்பற்ற மென்மை பொருந்திய பெண் வடிவைப் (இராமன்) பார்த்து; ஆர் உழை அடங்கும் - இவள் அழகு யாரிடத்து அமையும்?; அழகிற்கு அவதி உண்டோ - இவள் அழகிற்கு எல்லை உள்ளதோ?; நேரிழையர் யாவர் இவர் நேர் என நினைத்தான் - மகளிர் இவளுக்கு ஒப்பானவர் யார் உள்ளார்? என்று எண்ணினான்.
பேர் - பெருமை என்றதன் நீட்டல் விகாரம். உழை - இடம். அவதி - எல்லை. கீழ், மேல், நடு ஆகிய மூன்று உலகங்களிலும் இப்படிப்பட்ட அழகைக் காணல் அரிது. எனவே இத்தகைய அழகு படைத்தவள் யார் எனத் தன் மானிட அவதாரத்திற்கேற்ப இராமன் எண்ணினான். 'அழகிற்கு அவதி உண்டோ?' என இங்குக் கேட்ட கேள்விக்கு விடை போலப் பின்னர் 'அழகிற்கு எல்லை இல்லை ஆம்' (2791) என்ற தொடர் அமைந்துள்ளது.
நேரிழையர் - ஏற்ற அணிகலன் அணிந்த பெண்டிர் ஒத்த ஆடையை உடையவர் எனவும் கொள்வர். (இழை - நூல், நூலின் பெயர் ஆடைக்கு ஆம். கருவியாகுபெயர்.) புதிதாகக் கண்ட பெண்ணை மரியாதையுடன் எண்ணும் இராமனின் பண்பிற்கேற்ப யாவர் இவர் நேர் என நினைக்கின்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "In the wide world of the Nāgas, in the heaven beyond it,
- or on this earth, there is no such soft form as this," he saw;
- "in whom else could such beauty be held? Has beauty any limit?
- Among women adorned with jewels, who could equal her?" he thought.
What the poem says
Irāmaṉ, acting as the man he has become, is struck by the stranger's beauty. He thinks that nothing like her exists in the underworld of the serpents, in heaven, or on earth.
His question, whether beauty has any limit, is answered later in the episode by the phrase "there is no limit to beauty." He thinks of her respectfully, as befits someone meeting a woman for the first time.