கம்பராமாயணம் 2849 · ஆரணிய 5.35
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
விண் அருள வந்தது ஒரு மெல் அமுதம் என்ன - தேவருலகம் கொடுக்க வந்ததான ஒப்பற்ற இனிய அமுதம் போல; வண்ண முலை கொண்டு இடை வணங்க வருபோழ்தத்து - அழகிய மார்பகங்களைக் கொண்டு அதன் பாரத்தால் இடை துவளும்படி அடுத்து வரும் சமயத்தில்; எண் அருளி ஏழைமை துடைத்து - (இருவுளத்தில்) அருள் கொண்டு (அதனால்) அடியவர்களின் அறியாமையைப் போக்கி; எழு மெய்ஞ்ஞானக் கண் அருள் செய் கண்ணன் - மேலும் வளரும் தத்துவ ஞானமாம் கண்ணை அளிக்கும் திருமால் அவதாரமாம் இராமன்; இரு கண்ணின் எதிர் கண்டான் - இரண்டு கண்களாலும் எதிரே பார்த்தான்.
அமுதம் தேவரிடத்து இருப்பதால் அவர்கள் அளிக்க வந்தது என்க. அமுதத்தை முலைக்கு அடையாகக் கொள்வதுடன் அவளுக்கும் அடையாகக் கொள்ளலாம். ஏழைமை - அறியாமை. கண்ணன் - எல்லாருடைய கண்களைக் கவரும் அழகுடையவன்; எல்லார்க்கும் அறிவுக் கண்ணை அளிப்பவன்; பால காண்ட உலாவியற் படலத்தில் 'யாவர்க்கும் கண்ணன் என்றே ஓதிய பெயர்க்குத்தானே உறு பொருள் உணர்த்திவிட்டான்' (1068) என வருதல் காண்க. மேலும் யாவர் மாட்டும் கருணைபொழியும் கண்ணை உடையவன் எனலுமாம். பரம்பொருளாய் நின்று உலகிற்கு மெய்ஞ்ஞானக் கண் அருள்பவன் தான் எடுத்த மானிடப்பிறப்பிற்கேற்பப் புரியும் அலகிலா விளையாட்டைக் குறிக்கும். இதனால் சூர்ப்பணகை மாறு வேடம் கொண்டு மயக்க எண்ணித் தோல்வியுற்றதை எண்ண இடமுளது. இவளைப் போன்றே மாரீசனும் முயன்று தோல்வியுறுகிறான். காப்பியப் போக்குக்கு இவர்தம் முயற்சிகள் துணை புரிகின்றன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As she came, like a soft nectar sent down by the heavens as a gift,
- her waist bending under her lovely breasts,
- Kaṇṇaṉ, who in grace wipes away ignorance and grants
- the eye of rising true knowledge, saw her before his two eyes.
What the poem says
Cūrppaṇakai approaches like nectar sent down from heaven, slim-waisted and full-breasted. Irāmaṉ looks straight at her.
The poet calls him Kaṇṇaṉ, a name of Viṣṇu, and plays on the word kaṇ, eye: he is the one who charms every eye and who gives devotees the inner eye of true knowledge. The irony is pointed. The god who removes all delusion cannot be deceived by her disguise, just as the demon Mārīcaṉ's trick will later fail to deceive him.