கம்பராமாயணம் 2852 · ஆரணிய 5.38

Section ஆரணிய காண்டம் / 5. சூர்ப்பணகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வேத முதல் - வேதங்களுக்கு மூலமான இராமன்; திரு சேயோய் - திருமகள் போன்றவளே! செந்நிறமுடையவளே!; நின்வரவு தீது இல் வரவு ஆக - உன்னுடைய வருகை தீங்கில்லா நல்வரவு ஆகுக; போத உளது எம்முழை ஓர் புண்ணியம் அது அன்றோ - வர உள்ளது எம்மிடத்து ஒரு புண்ணியம் அல்லவா?; ஏதுபதி - எது உன் ஊர்?; ஏது பெயர் - எது உன் பெயர்?; யாவர் உறவு - எவர் உன் உறவினர்?; என்றான் - என்று கேட்டான்; பேதை அவள்தன் நிலை விரிப்பாள் - பேதையளான சூர்ப்பணகை தன்னுடைய தன்மையை விளக்கிச் சொல்வாளானாள்.

சேயோய் என்பதற்கு அன்னியளே எனவும் உரை காண்பர். அதற்குச் சான்றாகச் (தக்க. பரணி 194 உரை) சேயோய் என்பது தூரியாய் என்றவாறு என்ற பகுதியையும் 'புறத்தார்க்குச் சேயோன்' (திருவா. சிவபுராணம் 8) என்ற தொடரையும் காட்டுவர். 'தீது இல் வரவு ஆக' என்பது தம்மிடம் வந்தோர்க்கு இன்மொழி கூறும் முறைமை பற்றியதாகும். பால காண்டத்தில் கையடைப் படலம்தனில் கோசிக முனியைத் தயரதன் வரவேற்ற பாங்குடன் (319, 320) ஒப்பிடற்குரியது இது. 'வேத முதல்' என்பதற்கு வேதங்களின் சித்தாந்தம் செய்யப்பட்ட முதற் கடவுள் என்பர்; வேதன் முதல் எனப் பாடம் கொண்டு அன்னமாய் வேதத்தை உரைத்தவன் எனப் பிரமனை முதலாகக் கொண்டு குல வரலாற்றைச் சூர்ப்பணகை கூறினாள் என்பர். இராமனைத் தன்னிச்சைக்கு இணங்கச் செய்ய முடியும் என அவள் கருதியதால் பேதை எனப்பட்டாள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "May your coming be free of harm, lady like Tiru! You who come from afar,
  2. is it not some merit of ours that brought you to us?
  3. Which is your town? What is your name? Who are your kin?" asked
  4. the source of the Vedas; and she, deluded, began to tell her story.

What the poem says

Irāmaṉ greets the stranger with the courtesy due to a guest, much as Tacarataṉ once welcomed the sage Vicuvāmittiraṉ. He calls her Tiru, likening her to Lakṣmī, and asks about her home, her name and her family.

The word he uses for her may mean "fair one" or "stranger from afar." The poet calls her deluded because she thinks she can bend Irāmaṉ to her will.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tītu il varavu āka tiru! niṉ varavu cēyōy!
pōta uḷatu emmuḻai ōr puṇṇiyam atu aṉṟō
ētu pati? ētu peyar? yāvar uṟavu eṉṟāṉ
vēta mutal; pētai avaḷ taṉ nilai virippāḷ.