கம்பராமாயணம் 2853 · ஆரணிய 5.39

Section ஆரணிய காண்டம் / 5. சூர்ப்பணகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பூவிலோன் புதல்வன் மைந்தன் புதல்வி - தாமரைப் பூவைத் தன் இருப்பிடமாய்க் கொண்ட பிரமன் மகனாம் புலத்தியரின் மகன் விச்சிரவசுவின் மகள் ஆவேன்; முப்புரங்கள் செற்ற சேவலோன் துணைவன் ஆன செங்கையோன் தங்கை - திரிபுரங்களை எரித்து அழித்த காளை மீது ஏறிச் செலுத்தவல்லவனாம் சிவபெருமானின் நண்பனான சிவந்த கைகளை உடைய குபேரனின் தங்கை ஆவேன்; திக்கின் மாஎலாம் தொலைத்து வெள்ளிமலை எடுத்து உலகம் மூன்றும் காவலோன் பின்னை - எட்டுத்திசைகளிலுள்ள யானைகளின் வலி எலாம் இழந்து ஓடச் செய்து வெள்ளி மயமான கயிலை மலையைப் பெயர்த்தெடுத்து மூன்று உலகங்களையும் காக்கும் திறம்படைத்த இராவணனின் பின் பிறந்த தங்கை ஆவேன்; காமவல்லி ஆம் கன்னி என்றாள் - காம வல்லி என்ற பெயரையுடைய கன்னி என்று கூறினாள்.

பிரமனின் மகன் புலத்தியன். புலத்தியனின் மகன் விச்சிரவசு. அவன் மகள் சூர்ப்பணகை. மணம் செய்வோர் மூன்று தலைமுறை கூறுவதை எண்ணித் தன் மணக் குறிப்பையும் வெளியிட்டாள் எனலாம். இராவணனால் இலங்கையிலிருந்து துரத்தப்பட்ட குபேரன் சிவன்பால் தவம் செய்து அவர் நண்பனானான். கொடுத்துக் கொடுத்துச் சிவந்ததால் 'செங்கையோன்' எனப்பட்டான். இராவணனின் வெற்றியையும் ஆற்றலையும் ஆட்சிப் பெருமையையும் முறையே எட்டுத் திக்கு யானைகளை வென்றமையாலும் கயிலையை எடுத்தமையாலும் மூவுலகின் காவலாலும் சுட்டினாள் என்க.

உத்தர காண்டத்தில் புலத்தியன் மகனாம் விச்சிரவசு என்பவன் சுமாலியின் மகள் கைகசியை மணந்து இராவணன், கும்பகர்ணன், சூர்ப்பணகை, வீடணன் ஆகியோரைப் பெற்றனன் என்பதை அறியலாம். வியாச பாரதமும் பெருந்தேவனார் பாரதமும் இதுபற்றி வேறுபட்ட செய்தியைக் கூறும். அவற்றின் படி விச்சிரவசுவிற்கு மூன்று மனைவியர். அவருள் புட்போத்கடை என்பவளுக்கு இராவணனும் கும்பகர்ணனும் பிறந்தனர். மாலினிக்கு வீடணனும் இராகைக்குக் கரனும், சூர்ப்பணகையும் பிறந்தனர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "I am the daughter of the son of the son of him who sits on the flower; the sister
  2. of the red-handed one who is friend to the bull-rider who burned the three cities; the younger sister
  3. of him who routed the elephants of the quarters, lifted the silver mountain, and guards
  4. all three worlds; I am a maiden named Kāmavalli," she said.

What the poem says

Cūrppaṇakai gives her lineage as a bride would, naming three generations: she is the great-granddaughter of Brahmā, who sits on the lotus, through his son Pulattiyaṉ and grandson Viccuravacu.

She also names her brothers. Kupēraṉ, lord of wealth, is a friend of Śiva and is called red-handed because his hands are red from endless giving. Irāvaṇaṉ drove off the elephants that guard the eight directions, lifted Mount Kailāsa, and rules the three worlds. For herself she gives the name Kāmavalli, "creeper of desire."

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'pūvilōṉ putalvaṉ maintaṉ putalvi; muppuraṅkaḷ ceṟṟa
cē valōṉ tuṇaivaṉ āṉa ceṅkaiyōṉ taṅkai; tikkiṉ
mā elām tolaittu, veḷḷimalai eṭuttu, ulakam mūṉṟum
kāvalōṉ piṉṉai; kāmavalli ām kaṉṉi 'eṉṟāḷ.